“இந்த பழத்தை உரிச்சு கொடுங்க!”.. “மைதானத்தில் சிறுமியிடம் வேலை வாங்கிய வீரர்”... “நடுவரின் அதிரடி செயல்!”.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆஸ்திரேலியாவில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஓபன் தொடர் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள நிலையில், எடுத்த எடுப்பிலேயே ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் ஒருவர் வாழைப்பழ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டென்னிஸ் போட்டிகளின்போது, வீரர்களால் அடித்துவிடப்படும் பந்துகளை எடுத்துவருவதற்காக டென்னிஸ் பயிற்சி பெறும் சிறுவர் சிறுமியர் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.  அப்படி பயிற்சி பணியில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவரிடம், பிரான்ஸ் வீரர் எலியட் பெஞ்சட்ரிட் கொடுத்த வேலைதான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

ஆம், போட்டியின் நடுவே ஓய்வாக அமர்ந்திருந்த எலியட் பெஞ்சட்ரிட், பந்தை எடுத்துவரும் சிறுமியிடம் வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்து, அதை உரித்து தருமாறு கூறுகிறார். சிறுமியும் செய்வதறியாது வாழைப்பழத்தை வாங்கி உரிக்க முனைகிறார். ஆனால் அதைப் பார்த்த நடுவர் ஜான் ப்ளூம், சட்டென அந்த பழத்தை வீரரிடமே திரும்பி அளிக்கச் சொல்கிறார். சிறுமியும் அவ்வாறே செய்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து,

அந்த வீரரின் செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த சிறுமி ஒன்றும் வேலைக்காரர் இல்லை என்றும், அவரை சுயமரியாதையுடன் அவரது வேலையை பார்க்க விடுங்கள் என்றும் கருத்துக்களை கூறும் நெட்டிசன்கள், நடுவரின் செயலுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

VIDEOVIRAL, TENNIS, BANANA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்