'லெவல்' கிராஸிங் இல்ல; உண்மையிலேயே இதுதான் 'வேற லெவல்' கிராஸிங்... யானையின் சாதூரியம்! .. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

யானைகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு புலம் பெயர்ந்தாலும், ஒரு காட்டுக்குள் எத்தனை முறை அலைந்தாலும், தங்களுக்கு பழகிய இடங்களை அவை மறப்பதில்லை என்பதற்கு பொருத்தமாய் நடந்துள்ள சம்பவம்தான் இணையதளங்களில் வீடியோவாக வலம் வருகிறது.

ஐஎஃப்எஸ் அதிகாரி சுஸந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் யானை ஒன்று ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் லெவல் கிராஸிங்கை சாலை மார்க்கமாக வந்தடைகிறது. லெவல் கிராஸிங்கில், தடுப்பு கம்பிகள் குறுக்காக, தண்டவாள பாதையை அடைத்தபடி மூடப்பட்டுள்ளன. ஆனால் அங்கு வந்து நிற்கும் காட்டு யானை ஒன்று, லெவல் கிராஸிங் தடுப்புக் கம்பியினை தனக்கே உரிய பாணியில் லாவகமாக எடுத்துவிட்டு, தண்டவாளப்பாதையை கிராஸ் செய்து செல்கிறது. 

 

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுஸந்தா நந்தா, யானைகளுக்கு அவற்றின் புகலிடமும் வாழ்விடமும் மறப்பதே இல்லை. அவை என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்துவைத்துள்ளன என்று உருகி நெகிழ்ந்துள்ளார்.

 

ELEPHANT, VIDEOVIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்