‘யாருக்கும் தெரியாம புதைக்கணும்’.. அதிர்ச்சி கொடுத்த ‘விவசாயி’.. ஜேசிபி மூலம் தோண்டி எடுத்த அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானையை யாருக்கும் தெரியாமல் விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மத்தேட்டிப்பல்லி அருகே குடிமிப்பட்டியை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் அப்பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது நிலத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்று பிச்சாண்டி அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

உடனே யாருக்கும் தெரியாமல் யானையின் உடலை தென்னை ஓலையை வைத்து மறைத்துள்ளனர். பின்னர் ஜேசிபி எந்திரம் மூலம் விவசாய நிலத்தில் பெரிய பள்ளம் தோண்டி யானையை புதைத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் யானை புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து, அதை ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டி எடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிலரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானையின் உடலைப் புதைக்க உதவிய ஜேசிபி எந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: Vikatan

ELEPHANT, DIES, ELECTRICFENCE, GUDIYATTAM, FARMER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்