என்ன இது...! 'டிவி, ஃப்ரிட்ஜ்-ல இருந்து புகையா வருது...' 'அடுத்தடுத்த வீடுகளிலும் வந்துருக்கு...' ஏன் எல்லா வீட்லையும் இப்படி ஆகுது...? - 'அதிர்ச்சியில்' அனைத்தையும் 'தெருவில்' வைத்த பொதுமக்கள்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோடங்குடி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து டிவி, மிக்சி மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறி உடனடியாக மின்வாரியத்திற்கும் போலீசாருக்கும் புகார் அளித்துள்ளனர். அதோடு அங்கிருந்த சிலரின் வீட்டில் இருக்கும் டிவி, மிக்ஸி வெடித்து விட்டது எனக் கூறி அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு தெருவில் வைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்சார வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அப்பகுதி மின்கம்பங்களில் உயர் மின் அழுத்தம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்தது.
மேலும் இனி வருங்காலங்களில் உயர் மின் அழுத்தம் ஏற்படாத வகையில் மின்சார வயர்களை சரி செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கூறும் அக்கிராம மக்கள், உயர் மின் அழுத்த பிரச்சனை என்பது கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக தங்கள் கிராமத்தில் இருப்பதாகவும் அவ்வப்போது இதுபோல் மின்சார உபயோகம் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து வருவதாகவும் இதனால் பெருமளவு பிரச்சனைகளை சமாளித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: கொஞ்சம் கூட பயம் இல்ல...! 'வாஷிங்மெசினை ஓப்பன் பண்ணினப்போ...' 'இவ்வளவு இருக்கும்னு நினைக்கல...' 'அசால்ட்டாக டீல் செய்த பெண்...' - வைரல் வீடியோ...!
- நாங்களும் மொதல்ல அத 'நாய்'னு தான் நெனச்சோம்...! 'அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சுது...' - 'அத' வெளிய அனுப்ப படாத பாடு பட்ட தம்பதி...!
- VIDEO: 'ஏதோ கண்ணாடி நொறுங்குற சத்தம்...' 'பின்னாடி திரும்பி பார்த்தா...' 'அடிச்ச அடி அப்படி...' 'சல்லி சல்லியா உடைஞ்சிடுச்சே...' - வைரல் வீடியோ...!
- திடீரென தீ பிடித்து ‘ஃபிரிட்ஜ்’ எரிந்த வழக்கு.. நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!
- 'ஆசையா சோனி LED டிவி வாங்கிட்டு போனவரு...' 'வீட்ல போய் ஆன் பண்ணி பார்த்தா...' - அதிர்ந்து போன வாடிக்கையாளர்...!
- இனி இந்த மாதிரியான ‘விளம்பரங்கள்’ டிவியில் போட தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை ‘அதிரடி’ உத்தரவு..!
- லைவ் ஒளிபரப்பை ‘பாதியிலேயே’ நிறுத்திய டிவி சேனல்கள்.. அப்டி டிரம்ப் என்ன பேசினார்?.. பரபரப்பில் அமெரிக்கா..!
- டிவி சீரியல்கள் ‘தவறான உறவுகள்’ பத்தியே வருது.. இதுக்கெல்லாம் ‘சென்சார்’ கிடையாதா?.. நீதிபதிகள் சரமாரியாக கேள்வி..!
- 'தொலைக்காட்சி நடிகை கையும் களவுமாக கைது!'.. 'பொறிவைத்து காத்திருந்த போலீஸார்!'.. 'போதைப் பொருள் வாங்கிய அடுத்த நொடியே ஆப்பு!'..
- 'பிரபல டிவி ஷோவிலிருந்து'... 'மனைவிக்கு போன் செய்தபோது கேட்ட ஆண் குரல்'... 'எத்தன ட்விஸ்ட்டு'... 'வைரல் சம்பவம்!'...