தமிழகத்தில் உயரும் மின் கட்டணம்.. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | துபாயில் இருந்து வந்த பயணிக்கு பாசிட்டிவ்.. இந்தியாவில் 2 ஆக உயர்ந்த குரங்கு அம்மை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை..!

சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாகவும் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சார கட்டண உயர்வு இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,"தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12, 647 கோடி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது" என்றார்.

எவ்வளவு கட்டணம்?

தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு எவ்வித மாறுபாடும் இருக்காது எனவும், இந்த மானியத்தை மக்கள் விரும்பினால் விட்டுக்கொடுக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும், 42 சதவீத வீடுகளுக்கு மின்சார கட்டணத்தில் மாறுதல் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 - 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயனீட்டளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.298 கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. 

கடன் சுமை

தமிழக மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் கடன் ஏதும் வழங்க கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் தமிழக மின்சார வாரியத்திற்கு மேலும் சிரமமாக அமையும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த கட்டண உயர்வு உத்தேச பட்டியல் ஒழுங்கு முறை ஆணையத்திடம் அளிக்கப்பட்டு, அவர்களது ஒப்புதலுக்குப் பிறகே கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

Also Read | ஓடுறா..ஓடுறா பக்கத்துல வந்துடுச்சு.. Beach ல நடந்த திருமணம்.. சுவரை தாண்டி பொங்கி எழுந்த கடல் அலை.. வைரலாகும் வீடியோ..!

SENTHIL BALAJI, MINISTER SENTHIL BALAJI, ELECTRIC CHARGES, TAMILNADU GOVERNMENT, TN GOVT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்