மனைவி மறைந்த அடுத்த கணமே 91 வயது முதியவருக்கு ஏற்பட்ட சோகம்.. மரணத்திலும் மனைவியை கைவிடாத பாசமிகு கணவர்.. !
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரத்தில் மனைவி காலமான செய்தியை கேட்டவுடன் கணவனும் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமண பந்தம் எப்போதும் வாழ்வின் இறுதி நொடி வரையில் நீடிக்க கூடியது. பரஸ்பர அன்பும், காதலும் நீடித்த பந்தத்திற்கு அஸ்திவாரங்களாக அமைகின்றன. இப்படியானவர்கள் மரணத்திலும் இணைபிரியாதவர்கள். இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது ஆறுமுகம் - சுலோச்சனா தம்பதியின் வாழ்க்கை.
தம்பதி
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய வயது 91. இவரும், இவருடைய மனைவி சுலோச்சனாவும் ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இந்த தம்பதிக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அனைவர்க்கும் திருமணமான நிலையில் மகள் மட்டும் தனியே தனது கணவருடன் வசித்துவருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் மற்றும் சுலோச்சனா தம்பதி தங்களது இரு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இதனிடையே வயது மூப்பு காரணமாக ஆறுமுகம் உடல்நிலை பாதிப்பு அடைந்திருக்கிறது. இதனால் அவ்வப்போது அவர் மருத்துவமனைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மனைவி சுலோச்சனா மகன் மற்றும் மருமகள்கள் ஆறுமுகத்தை அன்போடு கவனித்து வந்திருக்கின்றனர். அடிக்கடி தனது கணவரிடம்,"உங்களுக்கு முன்னர் நான் இறைவனடி சேரவேண்டும்" என சுலோச்சனா சொல்லியதாக கூறுகின்றனர் அவரது உறவினர்கள்.
அதிர்ச்சி
இதனிடையே நேற்று காலை வழக்கம்போல காலையில் எழுந்து வீட்டு வேலைகளை மேற்கொண்டு வந்திருக்கிறார் சுலோச்சனா. அப்போது திடீரென அவர் மயக்கமடைந்து விழவே குடும்பத்தினர் பதறிப்போய், அவரை எழுப்பியுள்ளனர். ஆனால், எந்த பலனும் இல்லை. சுலோச்சனா மரணமடைந்தது புலனாகவே மகன் மற்றும் மருமகள்கள் கலங்கிப்போனார்கள். இதனையடுத்து, சுலோச்சனா உயிரிழந்தது குறித்து ஆறுகத்திடம் கூறியுள்ளனர் குடும்பத்தினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கொஞ்ச நேரத்தில் மயக்கமடைந்தார். சிறிது நேரத்திலேயே அவருடைய உயிரும் பிரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதனையடுத்து தம்பதியின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் முடிந்தும் ஊர்வலமாக செல்லப்பட்டு மானாம்பதி மயானத்தில் இருவர் உடலையும் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி உயிரிழந்த செய்தியை கேட்டதும் கணவனும் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்யாணமாகி 3 வது நாளே சுயரூபத்தை காட்டிய மனைவி.. கலங்கிப்போன கணவன்.. போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்த உண்மை..!
- ஆண்மை குன்றியவர் என்பதை மறைத்து.. 200 பவுன் நகை வாங்கி திருமணம்.. பெண் அளித்த புகார்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- "என் பொண்டாட்டி கடல்ல விழுந்துட்டா".. துடிச்சுப்போன கணவன்..மொத்த படையையும் இறக்கிய போலீஸ்.. 2 நாளுக்கு அப்பறம் ஏற்பட்ட டிவிஸ்ட்..!
- "48 வருஷம் ஒண்ணா வாழ்ந்துட்டோம், இப்போ.." கணவர் இறந்த அடுத்த சில மணி நேரத்தில்.. மனைவிக்கும் நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்
- "பொண்டாட்டி'ய Tour-க்கு கூப்ட்டு போக முடியலயே.." வேதனைப்பட்ட கணவர், கடைசியில் எடுத்த அதிரடி ஐடியா.. "இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா??"
- "பண பிரச்சனை தீரணும்னா பரிகாரம் பண்ணனும்".. மனைவியின் பேச்சை நம்பி ஆற்றங்கரைக்கு சென்ற கணவர்.. அடுத்த நிமிஷமே நடந்த பயங்கரம்..!
- "அய்யா, என் புருஷன காணோம்.." மனைவி அளித்த அதிர்ச்சி புகார்.. "குக்கர வெச்சு தான்.." Professor காணாம போன வழக்கில் திடுக்கிட வைத்த 'ட்விஸ்ட்'
- விவகாரத்து பெற்று பிரிஞ்சு வாழும் கணவன் மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த சூப்பர் அட்வைஸ்..!
- "என் பொண்டாட்டிய என்கூட சேர்த்துவைங்க.. இல்லைன்னா".. மொபைல் டவர் மீது ஏறிய கணவன்.. பதறிப்போன கிராம மக்கள்..!
- 40 வருசத்துக்கு முன்னாடி காணாம போன மனைவி.. ஒரே ஒரு தப்பால்.. இத்தன வருசம் கழிச்சு மாட்டிய கணவர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி