வழக்கம் போல 'அண்ணனும்', 'தம்பியும்' ஒண்ணா 'குடிச்சுட்டு' வந்தாங்க... ஆனா நேத்து நெலம கைய மீறி போயிடுச்சு... குரூரத்தில் கொண்டு நிறுத்திய 'குடிப்பழக்கம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி பெயர் ராஜேந்திரன்.

Advertising
Advertising

இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. தனது தாய், தந்தையுடன் வசித்து வருகின்றனர். அண்ணன், தம்பி இரண்டு பேருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் தினமும் வேலை முடிந்ததும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதே போல, நேற்று மாலையும் இரண்டு பேரும் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கு இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டது. இதில் தம்பி ராஜேந்திரன், அண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், சிறிது நேரம் கழித்து இரவு ராஜேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குணசேகரன், ராஜேந்திரனை திட்டியதாக தெரிகிறது.

இதனால் மேலும், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தனது அண்ணனை தாக்கி கீழே தள்ளினார். அது போதாமல் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து குணசேகரனின் தலையில் போட்டார். இதில் குணசேகரனின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அண்ணனைக் கொன்ற தம்பி ராஜேந்திரனை கைது செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்