பாம்புக்கு ஒன்னும் அடிபடலையே... திடீர் பிரேக் அடித்த ஓட்டுநர்... பரிதவித்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு: அந்தியூர் சாலையின் குறுக்கே சென்ற பாம்பின் மீது வண்டியை ஏற்றிவிடாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால், நிலை தடுமாறி சாலையோரம் தலைக்குப்புற ஈச்சர் லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியது.

Advertising
>
Advertising

சிறு பாம்பை கூட கொள்ளக் கூடாது என்று நினைப்பவர்கள் உண்டு. வீட்டில் வளர்க்கும், நாயும், மாடுகளோடு அன்பை பரிமாறும் மக்கள் அதிகாமாகவே உள்ளனர். சாலையில் ஏதோ ஒரு பணிக்காக வேகமாக செல்பவர்கள் சாலையில் பாம்பு செல்வதை கண்டால் வண்டியை நிறுத்திவிட்டு பாம்பு சென்ற பின்னரே செல்வார்கள்.

ஆனால், உயிரை கொல்ல வருவது பாம்பாக இருந்தால் உயிரா, பாம்பா என்று பார்த்தோமானால் நமக்கு உயிர்தான் முக்கியம். நம்மை கடித்த பாம்பை கொன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நபர் தொடர்பான செய்திகளை படித்து தெரிந்திருக்கிறோம். ஆனால் பாம்பை காப்பாற்ற முயன்று விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. அதேபோன்ற சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சாலையில் ஈச்சர் லாரி ஒன்று சென்றது. சாலையின் பாம்பு ஒன்று சென்றதால் பாம்பின் மீது ஏற்றாமல் இருக்க லாரி ஓட்டுநர் திடீரென ப்ரேக் அடித்துள்ளார். இதனால் நிலை தடுமாறிய ஈச்சர் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் ஈச்சர் லாரி கவிழ்ந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரண்டியை கையில் எடுத்த தமிழசை.. தலைவாழை இலை போட்டு அண்ணாமலைக்கு.. ஒரே வார்த்தையில் உருக வைத்து சபாஷ்!

 

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாரியை மீட்டனர்.  இதேபோன்று கடந்த மாதத்தில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாச சமுத்திரம் அருகே 2 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றபோது, பத்து அடி நீளமுள்ள‌ சாரைப்பாம்பு சாலையில் சென்றதை கண்டு ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். இதனால் பின்னால் தொடர்ந்து வந்த லாரியின் ஒட்டுனர் பிரேக் பிடித்திருக்கிறார். இந்த விபத்தில் பின்னால் வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி மூன்று பேர் உயிரிழந்த சோக சம்பவமும் நிகழ்ந்தது.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய போறவங்களே.. உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்பு வருது!

அதேபோன்று விழுப்புரத்திலும் பாம்பை காப்பாற்ற லாரி ஓட்டுநர் செய்த செயல் பலரையும் பரிதவிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

EICHER LORRY, EICHER LORRY OVERTURNS, SAVE SNAKE, ANTHIYUR, ஈரோடு

மற்ற செய்திகள்