'பாலில் 'டாய்லெட்'க்கு பயன்படுத்தப்படும் தண்ணீரா?... 'எழும்பூரில் நடந்தது என்ன'?... அதிர்ச்சி வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், ரயிலில் உள்ள டாய்லெட்டிற்கு தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் குழாயில் இருந்து தண்ணீரை பிடித்து பாலில் ஊற்றுவது போல வீடியோவில் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் எண் 7-ல் இரவு 9.25 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், ஒரு நபர் பாலில் ரயில் கழிவறை தண்ணீரை பிடித்து கலப்பதாகவும் பதிவிட்டிருந்தார். எனவே பயணிகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்த சென்னை ரயில்வே மேலாளர் தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், இது குறித்த புகார் வந்த பொழுதே கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டதாகவும், கடைக்காரர் தண்ணீரை பாலில் ஊற்றவில்லை பாய்லரில் தான் ஊற்றியதாகவும், பாலில் அந்த தண்ணீர் கலக்க வாய்ப்பு இல்லை எனவும் பதில் அளித்துள்ளார்.
இருப்பினும் கழிவறைக்கு பயன்படுத்தபடும் தண்ணீரை எப்படி பாய்லரில் ஊற்றலாம் என நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘போர் அடிக்காமா இருக்க’... இனி ரயில் பயணத்திலும் சினிமா, இசை நிகழ்ச்சிகள் பார்க்கலாம்... புறநகர் ரயில்கள் உள்பட... ரயில்வே நிர்வாகத்தின் புதிய வசதி!
- “பொங்கல் நெருங்கிடுச்சே?”.. “சென்னையில் இருந்து 4,950 சிறப்பு பேருந்துகள்!”.. “சிறப்பு ரயில்கள் பற்றிய விபரங்கள் உள்ளே!”
- இந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்!
- 'வருவாய் குறைவு'...'ரயில்வே கட்டணம் எவ்வளவு உயர போகுது'?...அதிர்ச்சியில் மக்கள்!
- 'மின்சார ரயில்களில் அதிரடி ஆஃபர்'...'ஒரே ஒரு பாஸ் மட்டும் போதும்'...மகிழ்ச்சியில் 'சென்னை மக்கள்'!
- ‘உதவிக்கு யாரும் இல்ல’!.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’!.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..!
- 'எனக்கு சென்னை பிடிக்கல'...'பேச்சால் மயக்கிய வாலிபர்'...'மெரினா'வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!
- ‘அரளி விதை கலந்த பாலை குடித்த 5 மாத குழந்தை’.. ‘தலைமறைவான தாய்’.. வெளியான பகீர் தகவல்..!
- 'பாலில் அதிக நச்சுத் தன்மை!' ..முதலிடமே உங்க மாநிலம்தான்!.. மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!
- 'இது ரிசர்வேஷன்.. எறங்குங்க!'.. ஓடும் ரயிலில் தாயின் கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்!