'கொரோனாவை கட்டுப்படுத்தும் தமிழகம்...' 'கூடுதல் கண்காணிப்புடன் மருத்துவக்குழு...' தமிழக அரசின் சிறப்பான துரித நடவடிக்கைகள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாட்டிலேயே முதன்மையாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1.80 லட்சம் பேருக்கு கொரோனா குறித்த பரிசோனை நடந்துள்ளது. மேலும், தினமும் 500 பேருக்கு பரிசோதனை செய்வதற்கான ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக அளவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான அமைச்சர் குழு துரித நடவடிக்கைகளாலும், புத்திசாலித்தனமான செயல்பாட்டினாலும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
தமிழக மருத்துவ துறை சார்பில் தினசரி மருத்துவக் குறிப்பு வெளியிடப்படுகிறது. சென்னை, திருவாரூர், தேனி, நெல்லை, கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய 5 இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் இந்த 5 இடங்களிலும் 500 பேர் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். மத்திய அரசின் ஒப்புதலுடன் இது நடைபெறுகிறது. இந்த பரிசோதனைக்கு கட்டணம் வாங்குவதில்லை. 19.03.2020 அன்று மட்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 38 பேருக்கு பரிசோதனை நடைபெற்று இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முக கவசங்கள், கருவிகள் எல்லாம் போதுமான அளவில் உள்ளன. கூடுதலாக ரூ. 60 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கி இருக்கிறார். இதில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு மட்டும் ரூ. 30 கோடி ஒதுக்கி இருக்கிறார்.
மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா குறித்த தகவல்களை உடனுக்குடன் தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்து வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு... 8 வயது சிறுவனின் உருக்கமான கடிதம்!'... இதயங்களை வென்ற பிரதமரின் பதில்... என்ன கேட்டார் தெரியுமா?
- ‘அபார்ட்மெண்டில்’ ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட ‘கொரோனா’... ‘பதறாமல்’ உடன் வசிப்பவர்கள் செய்த ‘காரியத்தால்’ தடுக்கப்பட்ட ‘ஆபத்து’...
- VIDEO: 'ஜன தொகையைக் குறைக்க... இலுமினாட்டிகளின் சதியா கொரோனா வைரஸ்!?'... பரபரப்பை ஏற்படுத்திய 'ஹீலர் பாஸ்கர்'!
- 'உங்க ஏரியால கொரோனா இருக்கா...?' 'இனிமேல் வீட்ல உட்கார்ந்துக்கிட்டே தெரிஞ்சுக்கலாம், அதுக்கு...' இந்திய அரசு வெளியிட்டுள்ள வாட்ஸப் நம்பர்...!
- VIDEO: ' நீங்க முதல்ல 'இத' பண்ணுங்க... அப்புறம் 'அட்வைஸ்' பண்ணலாம்!'... சர்ச்சையாகிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ... எம்.பி-ஐ வருத்தெடுத்த நெட்டிசன்கள்!
- 'சுடச்சுட இலவச சிக்கன் 65...' 'கோழிக்கறி சாப்பிட்டா கொரோனாலாம் வராதுங்க...' மக்கள் குவிந்ததால் டிராபிக் ஜாம் ஆன புதுச்சேரி...!
- ‘துபாயிலிருந்து மதுரை வந்த 143 பயணிகள்’... ‘கண்காணிப்பு மையத்திற்கு செல்ல மறுப்பு?’... ‘விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு’!
- 22ம் தேதி-யாரும் வீட்டைவிட்டு 'வெளியே' வரவேண்டாம்... பிரதமர் மோடி 'வேண்டுகோள்'... என்ன காரணம்?... தேசத்தை திரும்பி பார்க்க வைத்த பிரதமரின் உரை!
- 'கொரோனா - சீனாவின் உயிரியல் ஆயுதமா? (Bio weapon) அல்லது இயற்கை வைரஸா?'... உண்மையைப் போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- VIDEO: 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா!... முக்கிய செய்தி சொல்ல ஓடோடி வந்த பேத்தி!'... கண்ணாடி ஜன்னல் வழியே... கண்ணீரில் மூழ்கடித்த பாசப் போராட்டம்!