'எப்போ பாத்தாலும் கையில அம்மாவோட மொபைல் '... 'வங்கி பாஸ்புக்கில் காத்திருந்த அதிர்ச்சி'... 'பையனை விசாரித்த பெற்றோர்'... தூக்கி வாரி போட வைத்த சிறுவனின் பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றைய வளரும் தொழில்நுட யுகத்தில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்களை விட அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்து அளவிற்கு அதிகமாகச் சுதந்திரம் கொடுக்கும் போது எதுமாதிரியாத சிக்கல்கள் உருவாகும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சமீபத்தில் வங்கிக்குச் சென்று பாஸ்புக்கை பிரிண்ட் செய்துள்ளார். அப்போது வங்கிக் கணக்கில் 90 ஆயிரம் குறைந்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ந்து போன கணவனும், மனைவியும் எப்படி இது சாத்தியம் என வங்கியில் விசாரித்துள்ளார்கள். அப்போது ப்ளே ஸ்டோர் மூலமாக ஃப்ரீ பயர் கேம் விளையாடியுள்ளீர்கள். அதனால் பணம் பிடிக்கப்பட்டுள்ளது என வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. உடனே பணம் எடுத்தால் வங்கியிலிருந்து மெசேஜ் வருமே எனச் செந்தில் கூறியுள்ளார்.
அதற்கு வங்கி அதிகாரிகள், கண்டிப்பாக மெசேஜ் வந்திருக்கும், உங்களது மொபைல் போனை நன்றாகச் சோதனை செய்து பாருங்கள் எனக் கூறியுள்ளார்கள். அப்போது தான் தங்களது மகன் எப்போதும் மொபைலும் கையுமாக இருந்தது நினைவிற்கு வந்தது. இதையடுத்து இருவரும் சிறுவனிடம் சென்று விசாரித்துள்ளார்கள். அப்போது சிறுவன் சொன்ன பதில் இருவரையும் அதிர்ச்சியில் உறையவைத்து. 12 வயதே ஆன அந்த சிறுவன் ஃப்ரீ பையர் என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார்.
தொடர்ந்து அந்த விளையாட்டை மொபைலில் விளையாடி வந்த அந்த சிறுவன், ஒரு கட்டத்தில் விளையாட்டின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, தனது அம்மாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அந்த விளையாட்டை விளையாடி உள்ளான். இதன்மூலம் தாயின் வங்கிக் கணக்கிலிருந்த 90 ஆயிரம் பணம் காலியாகியுள்ளது. பணம் எடுக்கப்பட்டதும் வங்கியிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. அதை அவனது பெற்றோர் பார்க்கக் கூடாது என்பதற்காக வங்கியிலிருந்து வந்த எஸ்.எம்.எஸ்யும் அளித்துள்ளான்.
இதற்கிடையே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறப் பெற்றோர்களே முக்கிய காரணமாக விளங்குகிறார்கள். ஆனால் குழந்தை கேட்கிறான் எப்படிக் கொடுக்காமல் இருப்பது என தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள் என்பதே உண்மை. பல பெற்றோர்கள் தங்கள் வேலையை பார்ப்பதற்காகவோ, அல்லது தங்களது பொழுது போக்கில் மூழ்க, குழந்தைகளிடம் செல்போனை கொடுத்து அவர்களை அமைதியாக்கி விடுகிறார்கள். ஆனால் அதுவே பின்னாளில் ஆபத்தாகப் போய் முடியும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.
இதனிடையே சிறுவனின் பெற்றோர் அந்த சிறுவனுக்கு நூதன தண்டனை ஒன்றை வழங்கியுள்ளனர். அதாவது 90 ஆயிரம் வரை 1,2,3 என எண்களை எழுதச்சொல்லி தண்டனை வழங்கியுள்ளனர். 3 ஆயிரம் வரை எழுதிய அந்த சிறுவன், அதற்கு மேல் எழுத முடியவில்லை, கை வலிக்கிறது எனக் கூறியுள்ளான். இதனிடையே தங்களது குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது, என நினைப்பதைப் பெற்றோர் கைவிட வேண்டும். தொழில் நுட்ப யுகத்தில் வளரும் அந்த குழந்தைகளுக்கு எது அவசியம், எது அவசியம் இல்லை என்பதைச் சிறு வயது முதலே உணர்த்தினால் மட்டுமே இதுபோன்ற ஆபத்துகள் நிகழாமல் தடுக்க முடியும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெளியிலதான் பேங்க் கேஷியர்!'.. 'லேப்டாப்.. செல்போனைப் பார்த்தாதான் தெரியுது பெரிய காமுகன்'!.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்! பகீர் வாக்குமூலம்!
- 'வங்கிக்கு ரெகுலரா வரும் பெண்'...'கவரிங் நகைகளை வச்சு போட்ட மாஸ்டர் பிளான்... 'சென்னை'யில் சத்தமில்லாமல் நடந்த மெகா மோசடி!
- 'பேங்க் வரப்போலாம் அவர் கையில கட்டுக்கட்டா பணம் இருக்கும்...' 'ஏற்கனவே plan-ஐ கச்சிதமாக போட்ட பேங்க் மேனேஜர்...' - சிசிடிவியில் பார்த்து மிரண்டு போன போலீசார்...!
- 'உங்களுக்கு வங்கி வேலையில் விருப்பமா?'... 'அதுவும் வொர்க் ஃப்ரம் ஹோம்'... 'பிரபல வங்கியின் அசத்தல் அறிவிப்பு!'...
- “அவங்க குறிவெச்சதே இதுக்குதான்!”.. ‘10,000 கணக்குகளை முடக்கிய ஹேக்கிங் மன்னர்கள்!’.. ‘ஸ்தம்பித்து நிற்கும் நாடு!’
- இந்த 'கொரோனா'வால பெருத்த 'நஷ்டம்'பா... "நீங்களே கெளம்புனா நல்லா இருக்கும்"... ஊழியர்களுக்கு செக் வைத்த முன்னணி 'வங்கி'!!!
- “படிச்சது இன்ஜினியரிங்”.. “பார்ட் டைமாக பர்னிச்சர்.. முழு நேரமாக.. பேஸ்புக்கில் பார்த்த காமுக வேலை!”.. அதிர்ச்சி அடைந்த ‘பெண்ணின் கணவர்!’
- 'தமிழகத்தில் இன்று முதல்'... 'வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்'... மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு...
- 'பணம் எடுக்காமலேயே வந்த எஸ்.எம்.எஸ்கள்'... 'ரூ 5 கோடிக்கும் மேல்'... 'சினிமா பாணியில் ஹேக்கர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ஊர்மக்கள்'...
- 'கார்டு மேலே இருக்குற 16 நம்பர் சொல்லு சார்'... 'இந்த குரலை ஞாபகம் இருக்கா'?... சென்னையில் புது யுக்தியுடன் களமிறங்கியுள்ள மோசடி கும்பல்!