'பொது முடக்கம் நீட்டிப்பு'?... 'முதலமைச்சர் நடத்திய முக்கிய ஆலோசனை'... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவிற்கு வருகிறது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாக உள்ளது. அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாகத் தளர்வுகளை அனுமதித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை 4 மணி நேரம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். 7-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த தடை தொடருமா அல்லது ஏதேனும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேநேரத்தில் ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்தைக் கேட்டு அறிந்து புதிய தளர்வுகள் பற்றி முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு தொடரும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'P.HD முடிச்சிட்டு டாக்டரா வருவான்னு தானே இருந்தோம்'... 'மொத்த கனவையும் நொறுக்கிய காது வலி'... ஏர்போர்ட்டில் நடந்த துயரம்!
- '3 லட்சத்தை கடந்த பாதிப்பு'... 'முதல்வர் இந்த முடிவை எடுப்பாரா'?... மருத்துவ குழுவுடன் முக்கிய ஆலோசனை!
- “வசந்த் & கோ” உரிமையாளரும், காங்கிரஸ் எம்.பியுமான ‘வசந்தகுமார்’ கொரோனாவால் காலமானார்!
- வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள்!.. சர்ப்ரைஸ் விசிட்-ஆக வந்து... முதல்வர் பழனிசாமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
- ஐபிஎல் அணிகளில் முதல் ஆளாக சிஎஸ்கே வீரருக்கு கொரோனா உறுதி!.. இன்னும் 22 நாட்களே இருக்கும் நிலையில்.. பரபரப்பு தகவல்!
- "வேற வழியே இல்ல... சென்னை மக்கள் இன்னும் 4 மாசத்துக்கு... இத கட்டாயம் செஞ்சே ஆகணும்”... - 'கொரோனா குறையாததால், மாநகராட்சி கமிஷனர் ஆணை!!!'
- 'எல்லோருக்கும் ஃபிரீ டெஸ்ட்'... 'அதெல்லாம் இல்ல'... 'சீனாவோட பயங்கரமான பிளான் இதுதான்'... 'அச்சத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ள மக்கள்!'...
- 'நிறையா பேருக்கு வேல போயிடுச்சுனு பயப்படாதீங்க!.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்'!.. பிரபல ஐடி நிறுவனம் சொன்ன 'சூப்பர் குட் நியூஸ்'!!
- 'இதுவரைக்கும் 'அவங்க' ஒருத்தருக்கு கூட கொரோனா இல்ல!'.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை 'பரபரப்பு' கருத்து!.. முதற்கட்ட ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'கொரோனா தொற்று'... வசந்தகுமார் எம்.பி. மிகவும் கவலைக்கிடம்!