நீட் எக்ஸாம 'தமிழ்நாட்டுல' கொண்டு வந்ததே 'அவங்க' தான்...! - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று அனைத்து தொகுதிகளிலும் மக்களை சந்தித்து அதிமுகவின் சாதனைகளை எடுத்துக்கூறியும் திமுக ஆட்சி காலத்தில் நிகழ்ந்த துரோகங்களை பற்றியும் பேசி வருகிறார். அவர் செல்லும் இடமெங்கிலும் ஆட்கள் கூட்டம் அலைமோதுகிறது.

                           

இந்த நிலையில், இன்று (25-03-2021) திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப்போது வேதசந்தூரில் பேசியபோது நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான் என பேசியுள்ளார்.

                                 

மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதே அதிமுகவின் கொள்கை. நீதிமன்றத்தின் உத்தரவால் தான் வேறு வழியில்லாமல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

                                 

இதன் காரணமாக தான் என்னுடைய தலைமையிலான அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பை பயில முடியும் என்று தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்