‘மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து’!.. முதல்வர் பதவியை ‘ராஜினாமா’ செய்தார் எடப்பாடி பழனிசாமி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து மோதின. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போதுவரை திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது.
ஆனால் அதிமுக கூட்டணி 77 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து தோல்வியை தழுவியது. இதனால் எடப்பாடி பழனிசாமி இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!
இதற்கு ட்விட்டரில் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதில், ‘மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக'... எதிர்க்கட்சித் தலைவர் யார்?
- 'லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி!.. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு'!.. பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இவரின் பின்னணி என்ன?
- 'காலையில் இருந்தே தொடர்ந்து இழுபறி...' 'ஒருவழியா முடிவுக்கு வந்த காட்பாடி தொகுதி நிலவரம்...' - கடைசியில் அதிரடி ட்விஸ்ட்...!
- ஒருவேளை 'இவரு' இல்லன்னா... 'நிலைமை வேற மாதிரி கூட இருந்துருக்கலாம்...' காரணம் என்ன...? - மாஸ் காட்டிய ஹரிநாடார்...!
- 'மோடி'யின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன 'ஸ்டாலின்'.. தன்னுடைய 'ட்விட்டர்' பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டது என்ன??..
- ‘உடைஞ்சு போயிருக்கும் திரைத்துறைக்கு ஆக்சிஜன் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்’!.. உதயநிதி ஸ்டாலினுக்கு ‘பிரபல’ நடிகர் வாழ்த்து..!
- 'நாங்க எங்க தோல்வியை ஏற்று கொள்கிறோம்'... 'ஏன் அப்படி சொன்னார்'... வைரலாகும் திமுக எம்.பியின் ட்வீட் !
- என்னுடைய அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்...! 'எல்லா மக்களும் திருப்தி அடையுற மாதிரி ஒரு ஆட்சியை கொடுக்கணும்...' - ரஜினிகாந்த் வாழ்த்து...!
- "நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.." ஸ்டாலினுக்கு 'வாழ்த்து' சொல்லி.. பிரதமர் 'மோடி' போட்ட 'ட்வீட்'!!
- ‘எத்தனை சோதனைகள், பழிச்சொற்கள், அவதூறுகள்..?’.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘முக்கிய’ அறிக்கை வெளியீடு..!