'இது காலத்துக்கும் தமிழரின் பெருமையை சொல்லும்'... 'கீழடி அருங்காட்சியகம்'... அடிக்கல் நாட்டிய முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கீழடியில் ரூ.12.25 கோடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தைக் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
கீழடியில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தொன்மையான தமிழர்களின் பெருமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டியது. அதில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் மிகமுக்கியமாக வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து மார்ச்23 ஆம் தேதியுடன் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி முதல் மீண்டும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளன. இதனிடையே தமிழர்களின் பெருமையை மேலும் பறைசாற்றும் வகையில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 12.25 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். உலகத்தரத்தில் இந்த அருங்காட்சியகம் அமைய இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வேகம் எடுக்கும் கொரோனா'.... 'நல்ல செய்தி சொன்ன முதல்வர்'... இவங்களுக்கு கண்டிப்பா நன்றி சொல்வோம்!
- 'கோவையில் கழிவுகளை அகற்ற இன்று முதல் ரோபோ!'.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி!
- மக்களின் அன்பு தான் இந்த பெயருக்கு காரணம்!.. 'எடப்பாடியார் நகர்' பின்னணி என்ன?.. நெகிழ்ச்சி சம்பவம்!
- 'கொரோனா சிகிச்சை'... தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவு!
- 5 மாவட்டங்களுக்கு 'அதிகம்' நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு... 'இறைச்சி' கடைகளுக்கு அனுமதி உண்டா?... தளர்வுகள் என்னென்ன?... முழுவிவரம் உள்ளே !
- தமிழகம் முழுவதும் மீண்டும் 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட்டது... இந்த 'மாவட்டங்களுக்கு' மட்டும் 4 நாட்கள் அதிகம்... விவரம் உள்ளே!
- 'தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?'... 'கொரோனா எப்போது குறையும்'... முதல்வர் பதில்!
- “4 பேருக்கு கொரோனா உறுதி!”.. முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வந்த பரிசோதனை முடிவுகள்!
- 'வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக'!.. 'தமிழக முதல்வர்' தொடங்கியுள்ள 'அசத்தல்' முயற்சி!
- 'இந்த' பகுதிகளில் வசிப்பவர்களுக்கு... நிவாரண தொகையை 'வீடுகளுக்கே' சென்று வழங்க வேண்டும்: தமிழக முதல்வர்