'முதல்வர் அப்படி என்ன சொன்னார்'...'நெகிழ்ந்த பத்திரிகையாளர்கள்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மீனாட்சியம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தபோது,  அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் முதல்வர் சொன்ன வாழ்த்து அவர்களை நெகிழ செய்தது.

திருப்பதி கோவிலை போன்று மதுரை மீனாட்சி அம்மன்  கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த தீபாவளி முதல் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து  லட்டு தயாரிக்கும் எந்திரம் வடமாநிலத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, தெற்கு ஆடிவீதி, யானை மகால் அருகே உள்ள இடத்தில் நிறுவப்பட்டது. அந்த எந்திரத்தின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து புதிய எந்திரம் மூலம் லட்டு தயாரிக்கும் சோதனை ஓட்டமும் நடந்தது. அதில் ஒரு மணி நேரத்தில் 2,400 முதல் 3 ஆயிரம் லட்டுகள் வரை தயாரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் இருந்து இதனை தொடங்கி வைத்த முதல்வர், அங்கிருந்த அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு லட்டு பிரசாதத்தை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு பிரசாதம் வழங்கிய முதல்வர், 'இறைவன் அருளால் எல்லாரும் குடும்பத்தோட மகிழ்ச்சியா வாழனும் என வாழ்த்தினார். முதல்வரின் இந்த அணுகுமுறை பத்திரிகையாளர்களை நெகிழ செய்தது.

EDAPPADIKPALANISWAMI, AIADMK, MADURAI, MEENAKSHI TEMPLE, FREE LADDU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்