ஆர்ப்பாட்டத்தின் நடுவே மயங்கிய எடப்பாடி பழனிச்சாமி.. பதறிப்போன மக்கள்..முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி மயங்கியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read | இந்திய IT நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO.. திகைக்க வைக்கும் தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார்..!
மின்கட்டண உயர்வு
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதில், 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு எவ்வித மாறுபாடும் இருக்காது எனவும், இந்த மானியத்தை மக்கள் விரும்பினால் விட்டுக்கொடுக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், 42 சதவீத வீடுகளுக்கு மின்சார கட்டணத்தில் மாறுதல் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 - 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயனீட்டளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.298 கட்டணம் உயர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கண்டனம்
இந்நிலையில், மின்கட்டண உயர்வை கண்டித்து கடந்த 25 ஆம் தேதி, சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி மிகவும் சோர்வாக காணப்பட்டார். கண்களை மூடியபடி நின்றிருந்த அவர் கொஞ்ச நேரத்தில் மயங்கவே அங்கிருந்தவர்கள் அவரை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். அதன்பிறகு அவரை அமர வைத்துள்ளார்கள். அதன்பிறகு காகிதங்களை வைத்து அவருக்கு விசிறிவிட்டிருக்கிறார்கள் அருகில் இருந்தவர்கள். அதன் பிறகு அவர் சகஜ நிலைக்கு திரும்பியதாக தெரிகிறது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மயக்கம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடல்நிலை சீரானதால் அங்கிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.
Also Read | அரசு பள்ளிகளில் இனி காலை சிற்றுண்டி..அரசாணை வெளியீடு.. அடேங்கப்பா மெனு செம்மையா இருக்கே..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவரு Bag'ல ஏதும் இல்ல, ஆனா, வயித்துக்குள்ள தான்.." சென்னை Airport வந்த பயணி.. சோதனையில் மிரண்டு போன அதிகாரிகள்
- “ஒரு காலத்துல லட்சக்கணக்குல நடந்த உற்பத்தி” .. சென்னையில் பிரபல கார் நிறுவனத்தின் கடைசி கார்..?
- "அமெரிக்கா To சென்னை.." 26 மணி நேர பயணம்.. மூதாட்டிக்காக ஒரு கோடி ரூபாய் செலவில் பறந்த தனி விமானம்.. பின்னணி என்ன??
- ADMK தலைமை அலுவலக சீல் அகற்ற கோரிய வழக்கு.. "சாவிய இவர்கிட்ட ஒப்படைங்க.."சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!
- "கலெக்டர் ஆகணும்ன்னு ஆசைப்பட்டவரு.." காதல் தோல்வியால் வந்த சோதனை.. 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை..
- Breaking: "நாளை தனியார் பள்ளிகள் விடுமுறைகள் அளித்தால் கடும் நடவடிக்கை".. தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அதிரடி..!
- Breaking: கள்ளக்குறிச்சி கலவரம்.. "நாளைமுதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது".. வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் பெற்றோர்..!
- கலவரமான கள்ளக்குறிச்சி.. "குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்".. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.. முழுவிபரம்..!
- "எல்லார்கிட்டயும் Help கேட்ருக்கோம்.. இந்தியா மட்டும் தான் எங்களுக்கு உதவுது".. இலங்கை அமைச்சர் உருக்கம்..!
- "பத்தி எரியும் இலங்கை.. பொங்கி எழும் மக்கள்.." போராட்ட களத்திற்கு நடுவே காதல் ஜோடி செய்த காரியம்!!