ஓ.பன்னீர் செல்வம் தாயார் மரணம்.. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருக்கமான இரங்கல்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய அவர் நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 96.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்று பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பெரியகுளம் சென்றடைந்தார். வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த தனது தாயின் உடலை கண்டதும் துக்கத்தில் கண்ணீர் சிந்திய அவர், தனது தாயின் காலை பிடித்து கதறி அழுதார். இதனை தொடர்ந்து உசிலம்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மறைந்த பழனியம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மரணமடைந்த பழனியம்மாள் நாச்சியார் பெரியகுளம் ஓடக்கார தேவரின் மனைவி ஆவார்.

இந்த சூழ்நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி,"அண்ணன் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக ஓபிஎஸ் தாயார் மரணமடைந்த நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

OPS, MOTHER, EPS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்