சட்டமன்ற இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியினை அறிவித்த தேர்தல் ஆணையம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிகள், தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு மற்றும் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என களைகட்டி போய்க்கொண்டிருக்கும் வேளையில் இடைத் தேர்தலுக்கான தகவலையும் தேர்தல் ஆணையம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக மக்களவைத் தேர்தலின் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போதே பல கட்சியினர், அதே கூட்டணி நிலைப்பாடுகள்தான் இடைத் தேர்தலுக்கும் என்று சூசகமாக தெரிவித்தனர். சிலர் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து ஒரேடியாக பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்த நிலையில் 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் தேதியினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மே-19 நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கலுக்கான காலம் ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ல் முடிகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30 அன்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளாக மே 2-ஆம் தேதியும், மே-19 அன்று தேர்தலும், மே 23-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நிகழவுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தேர்தல் டியூட்டி பயிற்சி’ வகுப்பின்போது நெஞ்சுவலியால் ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!
- அரசியல் பதிவு போட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனையா?
- 'கும்பிடு போட்டதுக்கு’.. பொசுக்குன்னு கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்.. பரபரப்பு சம்பவம்!
- அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் பிடித்த ஃபேவரைட் குடும்பம் இதுதான்.. ஏன் தெரியுமா?
- 'இது வேற லெவல்’.. பார்க்கில் சந்தித்துக்கொண்ட எதிர்க்கட்சி வேப்டாளர்கள்.. வாக்கு சேகரித்த ருசிகரம்!
- ‘இப்படியும் பண்ணுவாங்க.. அதிகாரிகளே கவனம்’.. ரூபா ஐபிஎஸ் வெளியிட்ட வைரல் ‘சப்பாத்தி’ வீடியோ!
- ‘நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல்’ புத்தக வெளியீட்டிற்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி! பிண்ணனி என்ன?
- திடீரென வானத்தை நோக்கி 9 முறை சுட்ட அதிகாரி.. ’ஏன் இப்படி செஞ்சார்’..
- நம்ம விஜய் பட ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க தயாராகும் தேர்தல் ஆணையம்! அட அப்படி என்ன நடவடிக்கை?
- 'மோடியின் செல்வாக்கு'... இந்த மாநிலத்தில் தான் 'படுமோசமா இருக்கு'... ஆய்வு முடிவுகள்!