'FIRST நாங்க நம்பவே இல்ல!'.. 'சென்னையில் 1 ரூபாய்க்கு PIZZA!'.. ருசித்துக் கட்டிய வாடிக்கையாளர்கள்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1 ரூபாய்க்கு அன்லிமிட்டடு பீஸ்ஸாவை உண்ணும் ஆஃபரை நுங்கம்பாக்கத்தின் ஜகந்நாதன் சாலை எதிரே உள்ள ஈட்ஸா பீஸ்ஸா (EATZA PIZZA) ரெஸ்டாரண்ட் வழங்கியது.

முதலில் இதை நம்பாத பலரும் ரெஸ்டோரண்டுக்கு போன பிறகுதான் இந்த ஆஃபர் உண்மைதான் என்பதை உணர்ந்துள்ளனர். இப்படி ஒரு ஆஃபர் கிடைக்கும்போது பீஸ்ஸாவை ருசித்தே ஆகவேண்டும் என்று பல இளைஞர்களும்  ‘போறோம் சாப்பிடுறோம்’ என்று கிளம்பி வந்ததை வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.

பிஹைண்ட்வுட்ஸ் வீடியோவின் மூலம் இந்த தகவலைத் தெரிந்துகொண்டதை அடுத்து இந்த வாய்ப்பில் வெற்றி பெற்ற பலரும் இந்த சலுகையால், பீஸ்ஸாவையும், சாலட்களையும், சமோஸாவையும் 1 ரூபாய்க்கு உண்ணுவதற்கான வாய்ப்பு கிடைத்தற்கு நெகிழ்கின்றனர். இவர்களுள் பலரும் முதல்முறையாக பீஸ்ஸா சாப்பிடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ஸாவை உண்ட பலரும் உண்மையில் 1 ரூபாயாக இருந்தாலும் பீஸ்ஸாவின் தரமும் சுவையும் குன்றவில்லை என்று கூறியுள்ளனர்.

இதுபற்றி பேசிய ஈட்ஸா பீஸ்ஸா தரப்பினர், கடைக்கு வந்த பிறகும் கூட பலரும் நம்பவில்லை. உண்மையில் 1 ரூபாய்தானா? என்றெல்லாம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டனர். ஆனால் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது என்று கூறுகின்றனர். மற்ற நாட்களில் 299 ரூபாய்க்கு அன்லிமிட்டடு பீஸ்ஸா ஆஃபரும் இந்த உணவகம் தருவது குறிப்பிடத்தக்கது. 

PIZZA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்