சென்னையில கரெக்ட்டா 8.15 மணிக்கு .. டோங்கா கடலில் எரிமலை வெடித்ததை அடுத்து... வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டோங்கா: டோங்கா கடலுக்கு அடியில் ஏற்பட்ட வெடிப்பினால் சென்னை, புதுச்சேரி, காரைக்காலிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

சிபிக் தீவு நாடான டோங்கா கடல் பகுதிக்கு அடியில் இருந்த ஹங்கா டோங்கா ஹங்கா ஹாபாய் எரிமலை நேற்று முன்தினம் வெடித்தது. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழும் சிபிக் தீவு நாட்டில் கடல் அலைகள் ஊருக்குள் நுழைந்தது.

சுனாமி எச்சரிக்கை:

கடல் அலைகள் ஆக்ரோஷமாக கடற்கரை பகுதிகளை கடந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்வது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. மேலும், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதிகள் முழுவதும் நேற்று முன்தினம் பரபரப்பானது.

அமெரிக்காவிலும் அதிர்வு:

அதோடு ஹங்கா டோங்கா ஹங்கா ஹாபாய் எரிமலை வெடிப்பின் அழுத்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் எதிரொலியாக பல நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. அதிலும் டோங்கா தீவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அமெரிக்காவில் கூட இதன் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டது, வானிலை ஆய்வாளர்கள் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவில் பல பகுதிகளில் அதிர்வு:

இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் எரிமலை வெடிப்பு அதிர்வு பதிவானதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்திலும் இதன் அதிர்வு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எப்படி?

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று முன்தினம் சரியாக இரவு 8.15 மணியளவில் சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் உள்ள பாராமனி மீட்டரில் 1.5 ஹெக்டோ பாஸ்கல் என்ற அளவில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் மட்டுமல்லாது, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அதிர்வு பதிவாகியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தமிழகம் தவிர கேரளாவின் கோழிக்கோடு, திருவனந்தபுரத்திலும் எரிமலை வெடிப்பின் அதிர்வலைகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த அதிர்வால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

EARTHQUAKE, CHENNAI, TONGA, சென்னை, டோங்கா, நில அதிர்வு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்