கலசத்தில் ஊற்றப்பட்ட ‘புனித நீர்’.. கரெக்டா வந்த கருட பகவான்.. விண்ணை பிளந்த தமிழ் மந்திரங்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கின் போது கருடன் வானில் பறந்ததால் பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

தஞ்சை பெரிய கோயிலில் கடந்த 1ம் தேதி ஒன்றாம் கால பூஜை தொடங்கி நேற்றுடன் 7-வது கால பூஜை நிறைவடைந்தது. இதனை அடுத்து இன்று குடமுழுக்கு நடைபெறுவதால் கோயில் முழுவதும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. காலை 9:30 மணியளவில் பெரிய கோயிலின் குடமுழுக்கு தொடங்கியது.

இதனை அடுத்து காவிரி, கொள்ளிடம் ஆற்றில் இருந்து பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும் கோயில் கொடிமரம் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது கலசத்தின் மேல் கருட பகவான் வட்டமிட்டபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

THANJAVUR, THANJAVURBIGTEMPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்