‘இனி சென்னைக்குள்ள அவசியம் இல்லாம சுத்த முடியாது’!.. காவல்துறை ‘அதிரடி’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் செல்வதற்கும் இனி இ-பதிவு அவசியம் என காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் நடமாடியதால், இதனை தடுக்க கடந்த 15-ம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. இதனால் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திறந்திருந்த கடைகளுக்கான நேரம், காலை 10 மணி வரை மட்டுமே கடைகளை திறந்திருக்கும் என குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் இ-பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த இ-பதிவு முறை நேற்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது. இ-பதிவு முறையின்படி தனியாக பாஸ் வாங்க வேண்டியது இல்லை. தாங்கள் செல்போனில் இ-பதிவுக்காக பதிவு செய்து இருக்கும் தகவல்களை காட்டினாலே போதுமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அவசர பயணத்துக்காக செல்பவர்கள் கட்டாயம் இ-பதிவு முறையை பின்பற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல் இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால், அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பொதுமக்கள் தங்கள் சரக காவல்நிலைய எல்லைக்கு வெளியே செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுரைப்படி, காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர். அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயம்.. எதற்கெல்லாம் அனுமதி..? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..? வெளியான முழு விவரம்..!
- துப்புரவு தொழிலாளரை தாக்கிய ‘திமுக’ பிரமுகர்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை..!
- 'இப்படி ஒரு மனிதர் மீண்டும் கிடைப்பாரா'?.. தள்ளாத வயதிலும் சமூகப் பணி!.. எளிமையான வாழ்க்கை!.. டிராஃபிக் ராமசாமி காலமானார்!!
- சென்னை மண்டலத்தில் நிலவரம் என்ன?.. தமிழகத்தின் தலைநகரை உற்று நோக்கும் இந்தியா!.. நொடிக்கு நொடி திருப்பங்கள்!
- 'பிட்ச்சா டா இது'?.. "அய்யோ!.. அரண்டு போயிட்டேன்"!.. 'பிரெட் லீ'யை அதிரவைத்த சென்னை மைதானம்!.. தெறிக்கும் பின்னணி!
- ‘வேலைக்கு லேட்டான அவசரத்தில் வண்டியை சரியா பூட்டாம சென்ற பெண்’!.. திடீரென செல்போனுக்கு வந்த 10 மெசேஜ்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'ஒரே புழுக்கமா இருக்கு'... 'மாடியில் தூங்க போன தம்பதி'... 'காருக்குள் இருந்த வீட்டு சாவி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'இதெல்லாம் எவ்ளோ பெரிய ரிஸ்க்...' 'செல்போனை எடுத்திட்டு பாலம் அருகே சென்ற IT ஊழியர், திடீர்னு...' - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
- ‘காத்துக்காக கதவை திறந்து வச்சிட்டு தூங்கிய குடும்பம்’!.. காலையில் எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ‘ஷாக்’ சம்பவம்..!
- ‘வண்டியை நிறுத்துங்க..!’.. வாக்குப்பதிவு இயந்திரத்தை ‘பைக்கில்’ எடுத்துச் சென்ற இருவர்.. சுற்றி வளைத்த மக்கள்.. வேளச்சேரியில் பரபரப்பு..!