'கொழந்தை' பொறந்தா ரெண்டு பேரும்... 'ஒண்ணா' சேர்ந்துடுவாங்க நெனைச்சோம்... அடுத்தடுத்த 'மரணங்களால்' அதிர்ந்து போன உறவினர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் பிரபாவும் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரை சேர்ந்தவர் கணேசலிங்கம். இவர் தனியார் நிறுவனமொன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பிரபா(24) என்னும் இளம்பெண்ணுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 4 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் வரதட்சணை மற்றும் விவாகரத்து தொடர்பாகவும் வழக்கு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரபா கர்ப்பமாக இருந்து வந்தார். குழந்தை பிறந்தால் இருவரும் சமாதானமாகி விடுவார்கள் என உறவினர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பிரவசத்திற்காக பிரபா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை இறந்து பிறந்தது. தொடர்ந்து பிரபாவின் நிலையும் மோசமானதால் அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபா இறந்து போனார். மருத்துவர்கள் போதிய கவனம் செலுத்தாதே பிரபாவின் மரணத்துக்கு காரணம் என அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்த போலீசார் பிரபாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பிரபாவின் உடலை பெற்றுக்கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதல்வர்' காப்பீட்டு திட்டத்தின் கீழ்... தனியார் மருத்துவமனைகளில் 'கட்டணமின்றி'... கொரோனா சிகிச்சை பெறலாம்!
- ஒரு உயிரைக் காப்பாற்ற துடித்த ‘2 இதயங்கள்’!.. 6 நாள் கழித்து நடந்த அதிசயம்..!
- “அவருக்கு கொரோனா இல்ல.. வந்து அழைச்சுட்டு போங்க!”.. 'நோயாளியின்' சடலத்தை 'புதைத்த' பின் 'மருத்துவமனையில்' இருந்து வந்த 'போன் கால்'!.. 'அதிர்ந்த' குடும்பம்!
- "இனி தனியார் பரிசோதனை கூடங்களில்... கொரோனா பரிசோதனைக்கு ஆகுற செலவு இவ்ளோதான்"!.. 'அமைச்சர்' விஜயபாஸ்கர் அதிரடி!
- ‘எப்டியாவது காதலனை கல்யாணம் பண்ணனும்’!.. இளம்பெண் போட்ட ‘பகீர்’ திட்டம்.. திருப்பத்தூரை அதிரவைத்த சம்பவம்..!
- "ஒரு நாளைக்கே இவ்ளோவா?".. கொரோனா சிகிச்சைக்கு சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை கட்டணங்கள்.. ரமணா பாணியில் வெளியான பரபரப்பு வீடியோ!
- Video: ஊழியர்களை 'தாக்கி'... கொரோனா நோயாளிகளின் 'ரத்த' மாதிரிகளை... திருடிக்கொண்டு 'ஓடிய' குரங்கு!
- கொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து!.. 5 பேர் பலி!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!.. என்ன நடந்தது?
- 'கொரோனா புரட்டி எடுக்கும் போதா இது நடக்கணும்?'.. வேலையை திடீரென்று ராஜினாமா செய்த 200 நர்சுகள்!.. மஹாராஷ்டிராவில் பரபரப்பு!.. என்ன காரணம்?
- 'துணை முதல்வர் ஓ.பி.எஸ்' மருத்துவமனையில் 'அனுமதி'... 'தெலங்கானா கவர்னர்' உடல் நலம் 'விசாரிப்பு...'