ஒரே நாளில் இரண்டு துக்கம்.. நண்பர் & நெருங்கிய உறவினர் மரணத்தால் கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் ஸ்டாலினின் நெருக்கமான நண்பரும், நெருங்கிய உறவினரும் ஒரே நாளில் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
நடிகர் இயக்குனர் டி.பி. கஜேந்திரன் இன்று காலை உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். T. P. கஜேந்திரன் பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமியின் மகன் ஆவார்.
சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை டி.பி.கஜேந்திரன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. இயக்குனர் கஜேந்திரன், முதல்வர் ஸ்டாலினின் கல்லூரி கால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி மரணம் அடைந்தார். துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என்ற சகோதரிகளும், ராஜ் மூர்த்தி என்ற சகோதரரும் உண்டு. இந்நிலையில் துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி (62) உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளது துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழும்பூரில் உள்ள அவரது வீட்டில் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலினின் நெருக்கமானவர்கள் மரணம் அடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் முக ஸ்டாலினுக்கு சிறுமி கொடுத்த பரிசு.. பின்னர் தெரியவந்த நெகிழ்ச்சி காரணம்..!!
- முதல்வர் ஸ்டாலின் சென்ற ரயில் பாதியில் நிறுத்தம்.. அபாய சங்கிலியை பெண் இழுத்ததால் பரபரப்பு..!
- காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி..!
- பொங்கலோ பொங்கல்!! தொகுதி மக்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.. அவரே பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ..!
- ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
- "உங்களை நேர்ல சந்திச்சு நன்றி சொல்லணும்".. முதல்வருக்கு கடிதம் எழுதிய 3 ஆம் வகுப்பு மாணவி.. நெகிழ்ச்சி பின்னணி..!
- "கருணாநிதியை விட ஸ்டாலின் டேஞ்சரஸ்... ஸ்டாலினை விட உதயநிதி டேஞ்சரஸ்.. கதறியவர்களுக்கு தெரியும்.!".. வித்தியாசமாக வாழ்த்திய கரு. பழனியப்பன்
- "அன்பினால் மக்கள் மனங்களை ஆளும்".. அமைச்சர் உதயநிதியை வாழ்த்தி மேயர் பிரியா Tweet!
- அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற நாளில்.. கலைஞர் நினைவிடத்தில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட வார்த்தை!!
- "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்".. இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி.!