"பேச்சை கொறைங்கப்பா... இது என்ன பொதுக்கூட்டம்மா...? "துரைமுருகன் பேச்சால் கடுப்பான 'முதலமைச்சர்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், "அமைச்சர்கள் பொது கூட்டத்தில் பேசுவது போல நீளமாக பேசுகிறார்கள்" எனக் குறிப்பிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் மூன்றாம் நாள் நிகழ்வில் ஆளுனர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் உரையில் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி தேடி தேடி பார்த்தேன் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.  இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ‘குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களை பாதிக்காது. இதுதொடர்பாக பிரதமர் கூட விளக்கம் அளித்துள்ளார். அப்படி இருக்க மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே பேசுவது சரியல்ல எனக் குறிப்பிட்டார்.

உதயகுமார் பேசிய பின்னர் பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘அமைச்சர்கள் பொது கூட்டத்தில் பேசுவது போல நீளமாக பேசுகிறார்கள். நேரத்தை வீணடிக்காமல் பேச வேண்டும் என்றார். இதனைக் கடுமையாக ஆட்சேபித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அமைச்சர்கள் எப்படி பேச வேண்டும் என்று எதிர்கட்சி துணைத்தலைவர் உத்தரவு போட முடியாது. எங்களை அதிகாரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. யாருக்கும் அஞ்சும் அரசு இது அல்ல’என காட்டமாக பதிலளித்தார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் பதிலுக்கு கூச்சலிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியாக பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், "எந்த உறுப்பினர் பேசினாலும், அமைச்சர்கள் விளக்கம் அளிக்க உரிமை உண்டு. ஆனால், ஒவ்வொரு பதில் பேசும் போதும் அவர் நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார். அவரை சுருக்கமாக சொல்ல சொன்னேன். முதல்வர் கோபித்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்து விவாதத்தை முடித்தார்.

DURAIMURUGAN, CHIFMINISTER, EDAPADI PALANICHAMY, ASSEMBLY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்