முதல் தடவையா 'நம்ம கட்சி' ஆளுங்களே எனக்கு 'துரோகம்' பண்ணிட்டாங்க...! - 'சட்டசபை தேர்தல்' குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி மேற்கு ஒன்றிய தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவலத்தில் நேற்று (26-07-2021) நடைபெற்றது. அதில், தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்ப்பாசனம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, "நடந்து முடிந்த காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது எப்படியும்  நாம் ஜெயித்து விடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் சிலர் சரியாக வேலை செய்யாமல் இருந்து விட்டனர். மேலும், நம் கட்சியில் முதல் முறையாக சிலர் துரோகம் செய்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படியான துரோகம் நடைபெற்றது இல்லை. 

நல்ல வேளையாக தபால் ஓட்டின் காரணமாக நான் ஜெயித்து விட்டேன். தற்போது அமைச்சரும் ஆகிவிட்டேன். நடக்க போகிற உள்ளாட்சித் தேர்தலில் இப்படி இருக்காமல், உள்ளாட்சியின் அனைத்து பதவிகளிலும் நம்முடைய கழகத்தினர் வெற்றி பெற வேண்டும். அதற்கு மிகவும் தீவிரமாக உழைக்க வேண்டும்.

காட்பாடி தொகுதியை பொறுத்தவரை எந்த குறைகளும் இல்லாத அளவுக்கு பணிகளை செய்துள்ளேன். இருந்தபோதிலும், நீங்கள் எனக்கு சரியாக வேலை செய்யவில்லை. அதிலும் குறிப்பாக திருவலம் பகுதியில் எனக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை.

ஒருகாலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த திருவலத்தை தி.மு.க. கோட்டையாக மாற்றினோம். எனக்கு ஓட்டு போடாமல்துரோகம் செய்தவர்களை நான் மன்னிக்கிறேன். ஒரு குழந்தை அம்மாவை கடித்துவிட்டால் தன் குழந்தை மேல், அம்மா கோவம் கொள்வதில்லை. அது போன்று, நான் அந்த அம்மாவை போன்று துரோகம் செய்த நமது கட்சிக்காரர்களை மன்னித்து அவர்களுக்கும் உதவிகளை தாரளமாக செய்வேன்." இவ்வாறு துரைமுருகன் பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்