VIDEO: ‘இந்த தடவை உஷார் ஆயாச்சு’!.. பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் கார்கள்.. சென்னையில் இது எந்த இடம்னு தெரியுதா..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலத்தில் கார்களை நிறுத்த வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை நேற்றிரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல்வேறு சுரங்கப்பாதைகளில் தண்ணீர் புகுந்ததால், அவைகள் தற்காலிகமாக மூடிவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே வங்கக்கடலில் நிலை கொண்ட புயல், தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து சென்னைக்கு அருகே கடந்து செல்கிறது. இதன்காரணமாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏரிகள் பலவும் நிரம்பி வருவதால், அதை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வேளச்சேரி மேம்பாலத்தில் மக்கள் பலரும் தங்களது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், கார்கள் பல அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தற்போது முன்னெச்சரிக்கையாக பாலத்தின் மீது பலரும் கார்களை நிறுத்து வைத்துள்ளனர்.

இதை முகிலன் சந்திரக்குமார் என்பவர் இதை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

RAIN, HEAVYRAIN, CHENNAIRAINS, VELACHERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்