'சென்னையில்', தனியார் டிவி 'உதவி ஆசிரியருக்கு' கொரோனா... 'அலுவலகத்தை' தற்காலிகமாக பூட்டி சீல் வைத்த 'சுகாதாரத்துறை அதிகாரிகள்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஊழியர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளானதையடுத்து, அந்த அலுவலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் மூடி சீல் வைத்தனர்.

சென்னையில், ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பத்திரிகையாளர்கள், மருத்தவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் என சிலருக்க மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பத்திரிகை மற்றும் மீடியாக்களில் வேலைபார்க்கும், ரிப்போர்ட்டர்கள், கேமராமேன்கள், டிரைவர்கள் உள்ளிட்டோர் செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்த வண்ணம் இருந்தனர்.

இதன் காரணமாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் சத்தியம் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதன் அலுவலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் தற்காலிகமாக மூடி சீல்வைத்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உதவி ஆசிரியருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நோய்த்தொற்று இருக்கும் என சந்தேகிக்கும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்