'எங்களுக்குன்னே வருவீங்களா'.. 'நள்ளிரவில் போதையில் வந்த வாலிபர்'.. சென்னை போலீஸிடம் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ஈசிஆரின் நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்றிரவு  கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று தெருவோரத்தில் இருந்த நடைபாதைக் கடைகள், ஆட்டோ மற்றும் காம்பாவுண்ட் சுவர் என வரிசையாக மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் காரின் முன்பக்கமிருந்த ஏர் பேக் ஓப்பன் ஆனதால் அந்த காரை இயக்கிச் சென்ற நவீன் என்கிற 30 வயது இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனாலும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், காரின் கதவைத் திறந்த நவீனை வெளியில் இழுத்து காப்பாற்றியுள்ளனர்.

ஆனால் முழு போதையில் இருந்த நவீனோ, திடீரென போலீஸாரைப் பார்த்து, நீ யார்ரா? என்ன என்ன பண்ற?  நீயெல்லாம் ஆம்பளையா?  எதுக்கு வீடியோ எடுக்குற? நீ என்ன ரிப்போர்ட்டரா?  என ஏகக் கேள்விகளை கேட்டு போலீஸாரை வம்பிழுத்ததோடு, போலீஸாரின் சமாதான முயற்சியையும் முறியடித்துள்ளார்.

ஆனாலும் அவர் போதையில் இருந்ததை அறிந்த போலீஸார், அவரை எதுவும் செய்யாமல், அமைதி காத்து, போலீஸ் வண்டியில் ஏற்றியுள்ளனர். ஆனாலும் பேச்சை நிறுத்தாத நவீன், போலீஸாரைப் பார்த்து, ‘மச்சி நீ அங்க போ மச்சி’ என பேசியதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி ஒரு நிலையிலும் பொறுமையாக அவரை அழைத்துச் சென்று போலீஸார் ஹேண்டில் செய்துள்ளனர்.

பின்னர் விசாரித்ததில் மதுரையைச் சேர்ந்த நவீன், திருவான்மியூரில் தங்கி பணிபுரிவதும், அவர் போதையில் கார் ஓட்டிவந்து இவ்வாறு விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.

ACCIDENT, CHENNAI, CAR, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்