காட்டுக்குள் டிரைவர் இல்லாமல் நின்ற பால் லாரி.. நைட் ஆகியும் யாருமே எடுக்க வரல.. கடைசியில் தெரியவந்த உண்மை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வனப்பகுதிக்குள் நீண்ட நேரமாக டிரைவர் இல்லாமல் பால் லாரி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த தண்ணீர் பந்தல் வனப்பகுதியில் நேற்று மதியம் பால் லாரி ஒன்று நின்றுள்ளது. இரவு 3 மணி ஆகியும் லாரியை எடுக்க யாரும் வரவில்லை. இதனை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவலர்கள் கவனித்துள்ளனர். இதனை அடுத்து லாரியை ஊத்தங்கரை காவல்நிலையம் கொண்டு வந்தனர்

வனப்பகுதிக்குள் லாரி நிறுத்தப்பட்டிருந்ததால் லாரி டிரைவரை யாரேனும் கடத்தி விட்டார்களா? அல்லது அவருக்கு வேறு ஏதேனும் நடந்துவிட்டதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து லாரி டிரைவர் குறித்து தகவலை சேகரித்து அவரின் வீட்டுக்கு சென்றனர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஊத்தங்கரை அருகே செங்கன் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). இவர் பால் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று லாரியை வனப்பகுதிக்குள் விட்டுச் சென்று நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதையில் லாரி நிறுத்தியதை மறந்துவிட்டு வீட்டுக்கு சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காலை ஒன்பது மணிக்கு காவலர்கள் டிரைவர் அன்பழகனின் வீட்டுக்கு சென்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த பின் தான் இந்த உண்மைகள் தெரியவந்தது. இந்த நிலையில் டிரைவர் அன்பழகனுக்கு போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

LORRY, DRIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்