'இந்த ரூ.52 லட்சத்தை ஏடிஎம்-ல நிரப்பிட்டு வாங்க!'.. 'பேங்க்ல கொடுத்துவிட்ட பணம் மச்சினிச்சி வீட்டில் இருந்த 'கொடுமை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக அனுப்பப்பட்ட வாகனத்தோடு 52 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர் ஒருவரை மன்னார்குடியில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில், தி.நகரில் இருந்து 87 லடசம் ரூபாயுடன் சி.எம்.எஸ் என்கிற தனியார் நிறுவனம் 3 பேரை,  சென்னை வேளச்சேரியில் உள்ள விஜயாநகர் முதல் பிரதான சாலையில் உள்ள விஜயா வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக அனுப்பி வைத்திருந்தது. இதில் பணத்தை ஏற்றிவந்த வாகனத்தை அம்புரோஸ் என்பவர் இயக்கி வந்தார். முன்னதாக 5 ஏடிஎம்மில் பணத்தை நிரப்பிவிட்டு, அடுத்ததாக வேளச்சேரியில் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது காரில் இருந்த 52 லட்சம் ரூபாய் பணத்துடன் அம்புரோஸ் மாயமானார்.

இதனையடுத்து அவரை தீவிரமாக தேடி வந்த போலீஸார், சென்னை கொருக்குப் பேட்டை அருகே, கடத்தப்பட்ட காரை கண்டுபிடித்து கைப்பற்றினர். அதே சமயம் அம்புராஸின் மனைவி ராணி மேரியின் சகோதரி வீட்டில் இருந்து 32 லட்சம் ரூபாயை மீட்டுள்ளனர். எனினும் எஞ்சியுள்ள 20 லட்சம் ரூபாயுடன் மாயமாகியிருந்த அம்புரோஸ் இன்று கைது செய்யப்பட்டதோடு அவரிடம் அந்த பணம் குறித்த விசாரணையை போலீஸார் நடத்தி வருகின்றனர்.

BANK, ROBBERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்