Dr. Sharmika : “பெண்ணை கொச்சைப்படுத்துறேனா?”.. நுங்கு controversy-க்கு விளக்கமளித்த டாக்டர் ஷர்மிகா.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளம் சித்த மருத்துவர் டாக்டர்.ஷர்மிகா பல்வேறு இணையதளங்கல் வாயிலாக தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில், சமீபத்தில் அவர் பேசியது குறித்து சிலர் விமர்சித்திருந்தனர்.

Advertising
>
Advertising

இந்நிலையில், தான் பேசியவற்றை பற்றி விளக்கம் அளித்துள்ள இவர்,  “உடல் உறுப்புகளை போலவே உணவுகள் அல்லது பழங்கள் இருந்தால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் உறுப்புக்கு நல்லது என கூறியிருந்தேன, அதை பலரும் நான் முட்டாள் தனமான டாக்டர் என கூறியிருந்தீர்கள். அவர்கள் தயவு செய்து ஆய்வு செய்யுங்கள். பிறகு என்னிடம் வந்து பேசுங்கள், “கேரட், நுங்கு, பப்பாளி, அவகேடா, மாதுளை” என பல பழங்கள் அவை போன்றே இருக்கும் பல உடல் உறுப்புகள் நல்லவை என மருத்துவ ஆய்வுகளே சொல்கின்றன. அதையே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

இன்னொரு விஷயம் நுங்கு சாப்பிட்டால் மார்பகத்தின் வளர்ச்சி இருக்குமா என்பது பற்றி கேட்டு இருந்தீர்கள். இதற்கும் பதில் அளித்து இருந்தேன். இது பற்றி பலரும் குறிப்பிடும் போது, “ஒரு பெண்ணை ஏன் இப்படி கொச்சைப்படுத்துகிறீர்கள்? அவர்களுக்கு மார்பக அளவு எப்படி இருந்தால் என்ன? என்பது போன்ற பேச்சுகள் எழுத எழுந்தன. அவர்களுக்கு நான் விளக்குகிறேன்.

ஒரு மருத்துவராக என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு முதலில் நான் சொல்வது லவ் யுவர் பாடி. உங்கள் உடலை விரும்புங்கள். அது எந்த அளவில், எப்படி இருக்கிறதோ.. அப்படியே ஏற்க தயாராகுங்கள் என்பதை தான் முதலில் குறிப்பிடுவேன். வாங்க பழகலாம் என்கிற மருத்துவ முகாம் ஒன்றை நான் நடத்தினேன். அதில் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் பெண்கள் கலந்துகொண்டது உண்டு. அவர்களுக்கு நான் இதே தான் சொன்னேன். இதில் அவர்கள் என்னிடம் டிப்ஸ் கேட்கும்போது ஒரு மருத்துவராக டிப்ஸ் கொடுத்து தான் ஆக வேண்டும். அப்படி நான் கொடுத்த டிப்ஸ் தான் நுங்கு.

அடிப்படையில் குளிர்ச்சியான உணவை எடுக்கும் பொழுது உடல் எடை கூடி போகும். ஆக, நுங்கு குளிர்ச்சியானது என்பதை பரிந்துரைத்தேன். ஆனால் உடல்வாகு அப்படி இருப்பது ஒரு குறை அல்ல, எனினும் டிப்ஸ் கேட்பவர்களிடம் எப்படி சொல்லாமல் இருக்க முடியும்? எனவே யாரும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

HOSPITAL, MEDICAL, HEALTH, DR SHARMIKA, DRSHARMIKA, டாக்டர் ஷர்மிகா, நுங்கு, உடல், ஆரோக்கியம், உணவு, மருத்துவம், சித்த மருத்துவம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்