'உங்கள மாதிரி ஆள் தான்’... ‘இந்த உலகத்திற்கு தேவை’... ‘நீங்க இன்ஸ்பிரேஷன்’... ‘வாழ்த்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் குவாடன் பேலஸ், உடல் வளர்ச்சிக் குன்றி காணப்பட்டதால், பள்ளியில் சக மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளானான். இதனால் மன உளைச்சலில் இருந்த அவனை, பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என மனம் வெறுத்து அவன் பேசிய வீடியோவை அவனது தாய் வெளியிட உலகம் முழுவதும் வைரல் ஆனது.
இதையடுத்து சிறுவனுக்கு ஆதரவு மட்டுமின்றி, டிஸ்னி லேண்ட் செல்வதற்காக கோடிக்கணக்கிலான பணமும் நிதியாக திரண்டது. உலக மக்களால் திரட்டப்பட்ட சுமார் 3.40 கோடி ரூபாயை தன்னைப்போல் உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக குவாடன் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த செயலை தமிழக சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ட்விட்டரில் பராட்டி உள்ளார். அதில் ‘குவாடன் நீங்கள் தனித்துவமானவர். ரூ. 3.40 கோடி பணத்தை நீங்கள், உங்களை போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொடுக்க முன்வந்தது உங்களது பெருந்தன்மையை காட்டுகிறது. உங்கள் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற அழகான மனிதர்கள் தான் இந்த உலகத்திற்கு தேவை. நீங்கள் உத்வேகம் அளிக்கக் கூடியவர்’ என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துணை முதல்வர்' என்ன 'மாடு' பிடி வீரரா?... 'துரைமுருகன்' கேள்வியால் சட்டப்பேரவையில் 'சிரிப்பொலி'... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' கொடுத்த 'விளக்கம்...!'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- “தாங்குற வலிமை இல்ல... மிஸ் யு மை டியர் பவ்!” .. கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்! வீடியோ!
- அமைச்சர் விஜயபாஸ்கரை... ஏர்போர்ட்டில் வழியனுப்பி விட்டு... திரும்பிய தனி உதவியாளருக்கு... நேர்ந்த பரிதாபம்!
- ‘தொடரும் மீட்புப் போராட்டம்’.. ‘இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்’.. ‘அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி’..
- 'எவ்ரிபடி'.. 'ஒருத்தருக்குமே தெரியலயா?'.. 'இவங்களுக்கு மெமோ ரெடி பண்ணுங்க'.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்!
- ‘விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தம்பதி..’ களத்தில் இறங்கிய ‘அமைச்சரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..’