‘பொது இடங்களில் இதை யாரும் டிரை பண்ணாதீங்க’!.. ‘இதனால கொரோனா பரவும் அபாயம் இருக்கு’.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொது இடங்களில் ஆவி பிடிப்பது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பொது இடங்களில், ஆவி பிடிப்பதற்கான கருவிகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் பலரும் ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மருத்துவத்துறை சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னை லயோலா கல்லூரியில் 100 படுக்கைகள் வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மையத்தை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘பொது இடங்களில் ஆவி பிடிக்க மக்கள் கூட்டமாக வருகின்றனர். கூட்டம் கூடும் எந்தவொரு இடத்திலும், கொரோனா பரவும் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் பொது இடங்களில் மக்கள் இப்படி ஆவி பிடிக்க வேண்டாம்’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ‘இதுபோல் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஆவி பிடிப்பதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீராவி இயந்திரத்தில் அடுத்தவர் ஆவி பிடித்ததும் உடனடியாக நாமும் பிடித்தால், கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும். நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்