'என்னோட உடம்பு நடுங்கும்'...'இந்த வேலைக்கு மட்டும் போகாதீங்க'...சென்னையில் கதறிய பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கால் காசு வருமானம் என்றாலும் நமது ஊரிலேயே சம்பாதியுங்கள், தயவு செய்து வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு மட்டும் செல்லாதீர்கள் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வீட்டு வேலைக்காக பலரும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். அவ்வாறு அழைத்து செல்லப்படும் பெண்கள் பல்வேரு துன்பங்களுக்கு ஆளாக்கபடுகிறார்கள் என்ற குற்றசாட்டு அவ்வப்போது எழுவது உண்டு. பல பெண்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்து தப்பித்தும் வந்து இருக்கிறார்கள். இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று பல இன்னல்களுக்கு ஆளாகி தமிழ்நாட்டுக்கு திரும்பிய பெண் ஒருவர் தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து குமுறியுள்ளார்.

அந்த வகையில் குவைத்தில் இருந்து திரும்பி வந்த மதுரையை சேர்ந்த ராஜலட்சுமி கூறும்போது, ''குடும்ப கஷ்டத்தின் காரணமாக வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய முடிவு செய்யப்பட்டது. ன்னுடைய கணவர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் ரூ.45 ஆயிரம் சம்பளம் என்றதும் ஆசைப்பட்டு சென்றுவிட்டேன். அங்கு சென்ற பிறகு தான் எவ்வளவு கொடுமை நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

காலை எழுந்ததில் இருந்து, இரவு தூங்க செல்லும் வரை வேலை வாங்கி கொடுமைப்படுத்தினார்கள். மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டேன். சொந்த ஊருக்கு திரும்பிவிடலாம் என்று நினைத்தால், அவ்வளவு எளிதாக போய்விடுவியா? இதற்காகவா இவ்வளவு செலவு செய்து அழைத்து வந்தோம்? என்று ஏஜெண்டுகள் தரப்பில் மிரட்டினார்கள். சொந்த மண்ணை விட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன்.

இதையடுத்து சுமார் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்த பிறகுதான் என்னை அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். என்னைப்போல் தமிழ் பெண்கள் பலரும் அங்கு சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தயவு செய்து வீட்டு வேலைக்காக யாரும் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம்.

CHENNAI, ABROAD, MAID WORK, EXPERIENCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்