Mandous Cyclone : மாண்டஸ் புயல்ல மாமாக்குட்டியே கூப்ட்டாலும் ஈசிஆர் பக்கம் போயிடாதீங்க!! வித்தியாசமாக அலெர்ட் கொடுத்த விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே வெள்ளிக்கிழமை நள்ளிரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை நேரங்களில் கரையை கடக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

மாண்டஸ் புயல் தற்போது வலுவிழந்து புயலாக சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைவெளியில் கரையை கடக்கும். இது புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே உள்ள மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது. சமூக வலை தளங்களிலும் வானிலை நிபுணர்கள் புயல் குறித்த அப்டேட்டுகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கலெக்டரும் தற்போதைய மாநில மனித உரிமை கமிஷன் செயலாளருமான விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ், “மாமாகுட்டியே அழைத்தாலும் ஈசிஆர் பக்கம் லாங் டிரைவ் போலாம்னு வெளியில் போயிடாதீங்க.. பாதுகாப்புடன் வீட்டில் இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இப்போதெல்லாம் எல்லாத்தையும் ட்ரெண்ட்டோடு சொன்னால்தான் புரிகிறது, போய் சேருகிறது என்பதால் விஜயகார்த்திகேயனின் இந்த விழிப்புணர்வு பதிவை பலரும் பாராட்டியும், கொண்டாடியும் வருவதுடன், அறிவுறுத்தலுக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | மாண்டஸ் புயல்...  மாடியிலிருந்து பெயர்ந்த கண்ணாடி.. சிலிண்டர் டெலிவரி ஊழியரின் கழுத்தில் பாய்ந்து பலி..!

MANDOUSCYCLONE, CHENNAI, TAMILNADU, RAIN, HEAVY RAIN, TAMILNADU WEATHER REPORT, VIJAYAKARTHIKEYAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்