“கிருஸ்துமஸ், புத்தாண்டில் விதிகளை மீறினா எங்களுக்கு போன் பண்ணாதீங்க!” .. ஜெர்மனியில் போலீஸாரின் ‘வியக்க வைக்கும்’ வேண்டுகோள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏற்கனவே ஊருக்குள் கொரோனா அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் போலீசாரின் பங்கு மிக இன்றியமையாததாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.

அவர்களது சேவை இந்த நாட்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்து வரும் நிலையில் ஜெர்மனியில் போலிசார் விடுத்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலகட்டத்தில் விதிகளை மீறுபவர்களை கண்டிக்கவோ அவர்களைப் பற்றிய புகாரை அளிக்கவோ உடனடியாக போலீசாரை அழைக்க வேண்டாம் என்று ஜெர்மன் போலீசார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். போலீஸ் யூனியனின் தலைவரான என்பவர் இது பற்றி பேசும்போது, ‘மக்கள் தங்களுடைய பகுதியில் சட்டவிரோதமாக யாராவது கூடுவதையோ அல்லது விதிகளை சட்டவிரோதமாக மீறுவதையோ நீங்கள் கண்டீர்களேயானால் எடுத்தவுடனேயே போலீசாரை முதலில் அழைக்க வேண்டாம். நீங்களே சென்று அவர்களிடம் விதிகளைப் பின்பற்றும் படி கூறுங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி விரிவாகக் கூறிய அவர்,  “இந்த மாதிரியான சமயங்களில் தான் நாம் தன்னொழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏற்கனவே குறைவான காலத்தில் நாம் ஒரு சுயக் கட்டுப்பாட்டுக்கு பழகிக் கொண்டு வரும் நிலையில் இப்படியான பண்டிகை காலத்தில் நாங்கள் எங்கள் கடமையை செய்ய வேண்டியிருக்கிறது. நாங்கள் எங்களுடைய கடமையை ஒழுங்காக செய்வோம் என்றாலும் அதற்காக ஒவ்வொரு வீடாக சென்று வீடுகளின் முன் யார் உட்கார்ந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் என்ன செய்கிறார்கள்? என்றெல்லாம் பார்த்துக் கொண்டு அவளுடைய தார்மீக உரிமையை மீற முடியாது. எங்கே விதிகள் மீறப் படுகிறதோ அது பற்றி புகார் வந்தால் உடனடியாக விசாரிக்கவும் நாங்கள் தவற மாட்டோம்.

எனினும் புத்தாண்டு 2021க்காக நாங்கள் ஒரு மிக முக்கியமான பெரிய ஆபரேஷனில் இறங்க வேண்டியதாக இருக்கிறது. ஆகையால் மக்களுக்காக சேவையாற்றும் முழு பணியில் முழு கவனத்துடன் இறங்கியிருக்கும் போலீசாருக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே இதற்கான விதிக்கப்பட்ட விதிகளை மக்கள் நன்கு அறிவர். எனவே அந்த விதிகளை மக்கள் பின்பற்றவில்லை எனில் போலீசாருக்கு அழைக்காமல் அவர்களிடம் மக்களே சென்று அறிவுறுத்தி விதிகளை பின்பற்றும்படி சொல்லி வலியுறுத்தலாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்