கண்முன்னே 'கறந்து' கொடுக்கப்படும் பால்... 50 மில்லி ஜஸ்ட் '200 ரூபாய்' தான்... அப்டி என்ன விஷேசம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. கழுதைப்பால் மருத்துவ குணங்கள் நிறைந்தது, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த கழுதைப்பாலை விரும்பி வாங்கி குடிக்கின்றனர்.

தற்போது கழுதைப்பால் விற்பனை செய்பவர்கள் வீதி,வீதியாக சென்று காலை 6 மணி முதல் கழுதைப்பாலை விற்பனை செய்து வருகின்றனர். கழுதைப்பால் கேட்பவர்களுக்கு அவர்களின் கண்முன்னே பாலை கறந்து கொடுக்கின்றனர். ஒரு சங்கு கழுதைப்பால் ரூ. 50-க்கும், 50 மில்லி கழுதைப்பால் ரூபாய் 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாலுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கிராக்கி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

 

ERODE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்