'இப்படி அழ வைச்சிட்டியே'... 'மனுஷனுக்காக நாய் நடத்திய பாச போராட்டம்'... உனக்கா இப்படி ஒரு முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாய் மிகவும் நன்றி உள்ள விலங்கு என்ற கூற்று உண்டு. அவ்வப்போது அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள் நடப்பது உண்டு. ஆனால் இந்த நிகழ்வு கல் மனதையும் கரைய வைக்கும் சோகத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

நெல்லை அருகே உள்ள கீழ வீரராகவபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பஸ் நிறுவன அதிபர் சோமசுந்தரம் என்பவரின் வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்தார். அவரது வீட்டில் பாதுகாப்பிற்காக நாய் ஒன்றும் வளர்க்கப்பட்டு வந்தது. லேப் என்ற வகையை சேர்ந்த வெளிநாட்டு நாய் வளர்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த காவலாளி பன்னீர்செல்வம், வீட்டின் முன்பக்க கேட் அருகே நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் ரத்தக்காயம் இருந்தது. இதனை கவனித்த அந்த பகுதி மக்கள், நாய் தான் அவரை கடித்து கொன்றிருக்க வேண்டும் என எண்ணி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து பன்னீர்செல்வத்தின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் காவலாளியின் உடலின் அருகில் கூட செல்ல விடாமல் நாய் ஆக்ரோஷமாக குரைத்து கொண்டே இருந்தது. சுமார் 2 மணி நேரம் போராடியும் காவலாளி உடலை மீட்க முடியாததால், என்ன செய்வது என தெரியாமல்  காவல்துறையினர் தவித்து கொண்டிருந்தார்கள். அப்போது சுருக்கு கயிற்றை நாயின் கழுத்தில் போட்டு அப்புறப்படுத்த முயற்சித்த போது நாய் எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. 

இதையடுத்து காவலாளியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது தான் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. தனக்கு உணவளித்து கவனித்து கொண்டவர் இறந்து விட்டார் என தெரிந்து நாய் நடத்திய பேச போராட்டம் அனைவரையும் கண் கலங்க வைத்த நிலையில், இறுதியில் அந்த நாயும் உயிரிழந்து இருப்பது சோகத்தின் உச்சம்.

POLICE, DOG, SECURITY MAN, DEATH, TIRUNELVELI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்