‘இருசக்கர வாகனத்தில் வந்தபோது’... ‘மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தடுப்புச் சுவர் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவிலை சேர்ந்தவர் பெனடிக் என்ற 27 வயதான மருத்துவர் பெனடிக். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், மருத்துவராக பணியாற்றி வந்தார். இதே மருத்துவமனையில், பணிபுரிந்துவரும் செவிலியர் ஒருவருடன், தனது கடந்த வியாழக்கிழமையன்று, இருசக்கர வாகனத்தில் வேலூரிலிருந்து, ஆம்பூர் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வெங்கிலி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனம் திடீரென அங்கிருந்த சாலை தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் மருத்துவரும், செவிலியரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த ஆம்பூர் போலீசார், இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே, மருத்துவரும், இளைஞருமான பெனடிக் உயிரிழந்தார்.  படுகாயமடைந்த செவிலியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VELLORE, ACCIDENT, DOCTOR, NURSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்