'இறப்பதற்கு' முன் 'வீடியோ காலில்' பேசிய 'டாக்டர்!'.. "அவரோட கடைசி ஆசை இதான்.. நிறைவேத்துங்க முதல்வர் அய்யா!" - கதறி அழும் சைமனின் மனைவி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மருத்துவர் சைமனின் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்வதை சில மக்கள் தடுத்ததால், பலரும் இதற்கு வேதனை தெரிவித்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் மீதே மனிதாபிமானமற்று மக்கள் செயல்பட்டுள்ளதாக சிலர் கண்டனமும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவர் சைமன், இறப்பதற்கு முன் தங்களுடன் பேசிய வீடியோ காலில் அவரது கடைசி கோரிக்கையை முன்வைத்ததாக, அவரது மனைவி ஆனந்தி சைமன் வெளியிட்டுள்ள கோரிக்கை வீடியோ நெஞ்சை உருக்கியுள்ளது.
அதில், “மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள். என் கணவர் டாக்டர் சைமன் கடந்த 19-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய ஃபாதர் அனுமதி கொடுத்தார். ஒரு சில சம்பவங்களால் வேலப்பஞ்சாவடியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டார். அதை நாங்கள் கண்களால் பார்க்கவும் இயலவில்லை.
ஆனால் அவர் இறப்பதற்கு முன் என் பிள்ளைகளுடனும் என்னுடனும் வீடியோ காலில் பேசினாங்க. ஒருவேளை நான் திரும்பி வரலனா, என்னை நம் மரபுப்படி அடக்கம் பண்ணுங்கனு கேட்டுக்கிட்டார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நல்லமுறையில் கொரோனாவை எதிர்த்து செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அதனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் குறைவான கொரோனா பாதிப்பிலான இறப்பை சந்திக்கிறோம்.
ஆகையால், ஷீல்டு செய்த சவப்பெட்டியில் தான் புதைக்கப்பட்டிருக்கிறார் என் கணவர். அதை அப்படியே எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்தால் யாருக்கும் எந்த தொற்றும் பரவாது. நான் 2 பிள்ளைகளுடன் நிற்கதியாக நிற்கிறேன். நான் கண்ணீருடன் முதலைமைச்சரிடம் வேண்டி கேட்கிறேன் அய்யா. என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேத்துங்கய்யா!” என்று கண்ணீர் மல்கக் கோரியுள்ளார்.
இந்நிலையில் சைமனின் மகன், மகளின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்க சைமனின் மனைவி ஆனந்தி சைமனிடம் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சீன' மருத்துவரால்... வடகொரிய அதிபருக்கு 'கொரோனா' பரவியதா?... விலகாத மர்மம்!
- இந்த ரணகளத்திலும் 'கிளுகிளுப்பாக' போட்டி நடத்திய 'சீனா'... '48 மணி' நேரத்தில் '10 மில்லியன்' பார்வையாளர்களை பெற்ற 'வீடியோ...'
- ‘மோசமான நிலையில் இருக்கும் நாடுகள்’... ‘இருமடங்கு உயரும் அபாயம்’... 'ஐ.நா எச்சரிக்கை'!
- 'பொருளாதாரம் சரிவு...' 'தொழில் பாதிப்பு...' 'சுற்றுலா முடக்கம்...' 'வேலையிழப்பு...' "கொரோனாவின் அடுத்த அடிக்கு தயாராகுங்கள்..." 'எச்சரிக்கும் சீனா...'
- 'கொரோனா' பாதிப்பிலிருந்து ஒருவர் குணமாக 'எத்தனை' நாட்களாகும்?... 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன?'...
- 'மருத்தவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'மகளைப் பார்க்க...' 'தந்தை செய்த துணிகர காரியம்...' '2 நாட்கள்' கழித்து பிணமாக மீட்கப்பட்ட 'சோகம்...'
- கொரோனாவை வைத்து 'பெருத்த' லாபம்... நெக்ஸ்ட் சீனாவின் 'ராஜதந்திரம்' இதுதானாம்... உலக நாடுகளுடன் கைகோர்த்த 'இந்தியா'... இனி என்ன நடக்கும்?
- 'ரமலான் நோன்பு நேரத்தில்'... 'இதெல்லாத்தையும் கடைப்பிடிங்க’... ‘உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்'!
- 'இதுவரை இல்லாத மாற்றம்!'.. கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!.. இந்தியாவில் நிகழ்ந்த அற்புதம்!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!