“அப்படி என்ன அவசரம்”! மருத்துவரின் அவசரத்தால் நேர்ந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அறுவை சிகிச்சையின் போது உபயோகிக்கப்படும் மருத்துவ உபகரணமான போர்செப்ஸ் என்னும் கத்தரிக்கோல்  வயிற்றுக்குள் இருப்பது தெரியாமல் பெண் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளியின் வயிற்று தோலை மூடி தையல் போட்டுவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜெனிதா என்ற 45 வயது பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதில் அவருக்கு அறுவை சிகிக்சை செய்த பெண் மருத்துவரான மங்களா ரவீந்திரன் மருத்துவ உபகரணமான போர்செப்ஸ் என்னும் கத்தரிக்கோல் வயிற்றுக்குள் இருப்பது தெரியாமல் வயிற்று தோலை மூடி தையல் போட்டுவிட்டார்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜெனிதாவிற்கு சில மாதங்கள் கழித்து அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இந்நிலையில் மற்றொரு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோலை மருத்துவர்கள் பத்திரமாக வெளியில் எடுத்துவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து மருத்துவ கவுன்சில் மருத்துவர் மங்களாவிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு அவசர காலங்களில் வேகமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தால் இதுபோன்ற தவறுகள் நிகழ்வதாக மருத்துவர் மங்களா ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், அறுவை சிகிச்சை முடிந்ததும் உபகரணங்கள், பஞ்சுகள் சரியான எண்ணிக்கையில் இருக்கிறதா என்று பார்பதற்கு அருகில் ஒரு செவிலியர் இருப்பார்கள் எனவே இந்த தவறுக்கு செவிலியரும் ஒரு காரணம் என்று கூறி செவிலியர் கவுன்சிலுக்கு மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு ஆணையிட பரிந்துரைத்துள்ளது.

TIRUNELVELI, HOSPITAL, SURGERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்