கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'தமிழக' எம்.எல்.ஏ... 'உடல்நிலை' கவலைக்கிடம்... 'மருத்துவமனை' வெளியிட்ட தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், தற்போது வந்த தகவலின் படி, அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அன்பழகன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்