‘தலைவராக முதல் மக்களவைத் தேர்தல்’.. 39 ஆண்டுகால பொள்ளாச்சி வரலாற்றை மாற்றிய அமைத்த மு.க.ஸ்டாலின்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொங்கு மண்டலத்தில் 39 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என இரண்டிலும் முன்னிலை பெற்றுவருகிறது. இதில் 37 மக்களவை தொகுதியுலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதற்காக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார். மேலும் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மத்தியில், இந்த வெற்றியைக் காண கலைஞர் இல்லையே உருக்கமாக பேசினார்.

இதில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 63,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1980 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சி.டி.தண்டபாணி வெற்றி பெற்று இருந்தார். அதற்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 6 முறை, மதிமுக 2 முறை, தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறை வெற்றி பெற்றுள்ளது. 39 ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலிலேயே வெற்றிவாகை சூட்டியுள்ளார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்