‘தம்பி எவ்வளவு செலவு செய்வ?’.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்.. நேர்காணலில் நடந்த சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக சார்பில் போட்டியிட விரும்ப மனு கொடுத்தவர்களிடம் நடந்த நேர்காணலின் போது உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட கேள்வி குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

சைதாப்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாரத்தான் வீரருமான மா.சுப்பிரமணியன் எழுதிய ‘ஓடலாம் வாங்க’ என்ற புத்தகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் வெளியிட்டார். இதை இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் அதனை பெற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘சில தினங்களுக்கு முன் தான், அண்ணாவின் புத்தகத்தை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்த புத்தக கண்காட்சியில், ஒரு பதிப்பகத்தை தொடங்கி தலைவர் அவர்களின் அறிக்கை அனைத்தையும் புத்தகமாக பதித்துள்ளோம்.

எனக்கு சேப்பாக்கத்தில் போட்டியிட ஆசை உள்ளது. கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன். ஆனால் இதுகுறித்து திமுக தலைவர்தான் முடிவு எடுப்பார். என்னை நிற்க வைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன். அதுமட்டுமல்ல, சேப்பாக்கம் தொகுதியில் யார் நின்றாலும் வெற்றி பெற செய்வதே எனது இலக்கு’ என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் நேர்காணல் குறித்து பகிர்ந்த அவர், ‘இதை சொல்லலாமான்னு தெரியல. நான் உள்ளே போனதும், டி.ஆர்.பாலு அவர்கள், டி.ஆர்.பாலு அவர்கள், நீ எதுக்குப்பா நேர்காணலுக்கு வந்த, நேராக சேப்பாக்கம் தொகுதியில் போய் வேலையைப்பார் என சொன்னார். அப்போது அருகில் இருந்த அண்ணன் ஆ.ராசா, தம்பி எவ்வளவு செலவு செய்வன்னு கேட்டாங்க. அப்பா கொடுக்கும் பணம் அனைத்தையும் செலவு செய்வேன்னு சொன்னேன். உடனே, நான்தான் பொதுச்செயலாளர், நான்தான் முடிவெடுப்பேன் என துரைமுருகன் அவர்கள் சொன்னார். அதற்கு, தலைவர் என்ன சொல்வாரோ அதைத்தான் கேட்பேன் என்றேன்’ என நேர்காணலில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துகொண்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்