அரசு வேலை.. 5 லட்சம் கொடு .. அமைச்சர்களுக்கும் பங்கு தரணும்! வீடியோவில் சிக்கிய திமுக நகர செயலாளர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி: அரசுவேலை, பணி இடமாற்றம் தேவையெனில் 5 லட்சம் பணம் கொடு என்று திமுக நகர செயலாளர் பேசும் வீடியோ வெளியாகி சர்சையை கிளப்பி உள்ளது.

Advertising
>
Advertising

தேனி மாவட்டத்தில் உள்ள தேனி நகரத்தின் திமுக நகரச்செயலாளர் சூர்யா பாலமுருகன். இவர் அங்கு சூப்பர் மார்க்கெட் வைத்து முழு நேர அரசியல்வாதியாக செயல்படுபவர். வரும் தேனி நகர உள்ளாட்சி தேர்தலில் நகர சேர்மனுக்கு போட்டியிடும் திமுக உறுப்பினர்களில் முன்னணியில் உள்ளவர். இவர் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி மற்றும் கே. என். நேருவுக்கும் மிகவும் நெருக்கம் என இவருடைய முகநூல் பதிவுகள் காட்டுகின்றன.

மேலும் ஒருங்கிணைந்த தேனி மாவட்ட முன்னாள் செயலாளர் மூக்கையா, தேனி மாவட்ட தற்போதயை மாவட்ட செயலாளர்கள் தங்க. தமிழ் செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் சூர்யா பாலமுருகன் மிகவும் நெருக்கம் என தெரிகிறது. இந்நிலையில் திமுக நகர செயலாளர் சூர்யா பாலமுருகன், ஜெயகாளை என்பவரிடம் அரசு வேலை பணியிட மாறுதலுக்கு 5 லட்ச ரூபாய் பணம் கேட்டதாக பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிறது. அந்த வீடியோவில் 10 பேருக்கு மொத்தம் 35 லட்சம் ஆகும் என்றும், பணத்தை முதலில் செக்காக கொடுக்கவும், பணி மாறுதல் கிடைத்த உடன் செக்கை திருப்பி கொடுத்து விட்டு ரொக்கமாக பணத்தை வாங்கி கொள்வதாகவும் கூறுகிறார். இது போக இந்த பணத்தில் அமைச்சர்களுக்கு பங்கு தர வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த வீடியோ தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்நிலையில் திமுக நகரச்செயலாளர் பாலமுருகன் இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். அதில் பொய்யான வீடியோ, ஆடியோ போட்டு ரூ.5 லட்சம் கேட்டு மூமுக பிரமுகர் மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் " மூவேந்தர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜெயகாளை என்பவர், ஒரு வீடியோ எடுத்து அதில் நான் பேசும் குரல் போல டப்பிங் மற்றும் எடிட்டிங் செய்து, என்னிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். இந்த பொய்யான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதேபோல, ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக, நான் அந்த பெண்ணி டம் பணத்தை பெற்றுக் கொண்டதாக, பெண் குரலில் பேசி ஒரு ஆடியோ ரெக்கார்டிங் தயார் செய்து அதை எனது வாட்ஸ் ஆப் நம்பரில் போட்டு என்னை மிரட்டுகிறார். மேலும், நாங்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால், தேனி நகர்மன்றத் தலைவருக்கு போட்டியிட உள்ளீர்கள். இந்த வீடியோ. ஆடியோக்களை வெளியிட்டு உங்கள் பெயரை  அவதூறு செய்வேன் என அச்சுறுத்தி வருகிறார். என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி வருகிறார். இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்த மனுவில் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

DMK, MKSTALIN, GOVT JOBS, DMK THENI, THENI DMK, TS BALAMURUGAN, தேனி, தேனி திமுக, அரசு வேலை, லஞ்சம், TNPSC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்