'எடப்பாடியில் முதல்வரை எதிர்த்து இவரா'?... 'ஆச்சரியத்துடன் நிருபர்கள் கேட்ட கேள்வி'... ஸ்டாலின் சொன்ன நச் பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். ஸ்டாலின் கொளத்தூரிலும், முதன் முறையாக உதயநிதி சேப்பாக்கத்திலும் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணி கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இன்று வெளியிடப்பட்டது. திமுக சார்பாக 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் சம்பத்குமார் என்ற இளைஞர் களமிறக்கப்படுகிறார். இதனை ஸ்டாலின் அறிவித்த நிலையில், இதுகுறித்து கேட்ட செய்தியாளர்கள், 'முதல்வரை எதிர்த்து சாதாரண வேட்பாளரை நிறுத்தியுள்ளீர்களே?' என்றனர். அப்போது பதிலளித்த ஸ்டாலின், “அவர் சாதாரண வேட்பாளர் என்று யார் சொன்னது? அவர் சாதாரணமான வேட்பாளராக இருக்கலாம். ஆனால், வெற்றி வேட்பாளர்” எனக் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- #BREAKING: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...!
- 'சசிகலா என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா'?... முதல் முறையாக மனம் திறந்த சீமான்!
- ‘தம்பி எவ்வளவு செலவு செய்வ?’.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்.. நேர்காணலில் நடந்த சுவாரஸ்யம்..!
- ‘விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை’!.. அதிமுக கூட்டணி கட்சிகள் சொன்னது என்ன..?
- ‘பரபரக்கும் அரசியல் களம்’!.. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்?.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..!
- 'தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி...' - கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க ஸ்டாலின்...!
- 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்...' 'தமாகா தலைவர் ஜி.கே.வாசன்...' - தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் திடீர் சந்திப்பு...!
- 'தயாராகும் தேர்தல் அறிக்கை...' 'தேர்தல் பணிகள் குறித்து...' - தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை...!
- 'வேகமெடுக்கும் வேட்பாளர் தேர்வு'... 'தயாராகும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்'... அதிமுக தலைமையகத்தில் தீவிர ஆலோசனை!
- 'நீண்டு கொண்டே சென்ற பேச்சுவார்த்தை'... 'நள்ளிரவில் நடந்த கையெழுத்து'... 'பாஜகவுக்கு 20 தொகுதிகள்'... நடந்தது என்ன?