'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய துணைக்கண்ட ஜனநாயகத்தின் முக்கிய நாளாக, பொதுத் தேர்தல் நாளான இன்றைய நாள் பார்க்கப்படுகிறது.
அரசியலாளர்கள் தொடங்கி பொதுமக்கள் அனைவருமே ஜனநாயகக் குடிமகனாக, சாமானியனாக தங்களது வாக்களிக்கும் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் நாளை, ஒரு திருவிழாவைப் போன்றதொரு புத்துணர்ச்சியான நாளாகக் கருதுவர்.
அவ்வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வாக்கினை பதிவு செய்வதற்காக தென் சென்னை தொகுதியில் உள்ள தேனாம்பேட்டை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் பாராளுமன்றத் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திமுக பொதுச் செயலாளரும் மூத்த தலைவர்களுள் முக்கியமானவருமான க. அன்பழகன், தென் சென்னை தொகுதி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்கும் விதமாக அந்தத் தொகுதியின் முக்கியமான வாக்குச் சாவடியான மைலாப்பூரில் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வருகை தந்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ’தமிழ்நாடுனா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க.. அகந்தையில வெச்சிட்டாங்க.. அதோட பேரு இதான்’!
- ‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்!
- ‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்!
- ‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு!
- 'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'?...கொதிப்பில் வேட்பாளர்!
- ‘யாருக்கு ஓட்டு போடுறீங்க.. மோடி கேமரா பிக்ஸ் பண்ணியிருக்காரு.. ஜாக்கிரத’..பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!
- ‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை?’ ஸ்டாலின் அதிரடி கேள்வி!
- 'கனிமொழி வீட்டில் எதுவும் கெடைக்கல.. ஆனா ரெய்டு போனது ஏன் தெரியுமா?’.. சத்யப்பிரதா சாஹூ!
- அதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்!