இட ஒதுக்கீடு குறித்த ஆர்.எஸ். பாரதியின் சர்ச்சை பேச்சு...விசிக தலைவர் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது... கண்டனத்தை பதிவு செய்த மக்கள் நீதி மய்யம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு குறித்து திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட கண்டன அறிக்கையில், அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம். அவர் ஒடுக்கப்பட்ட இனத்துக்காக மட்டுமல்ல வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது.
அப்படியிருக்கையில் சட்டம் கொடுத்த வாய்ப்பை பிச்சைப் போட்டதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அந்தக் கால ஜமீன் தனத்தோடு ஆணவமாகக் கருத்துக் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் திமுகவோடு கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இவர்கள் குணம் எப்படியானது என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களே உணர வேண்டிய நேரம் இது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துணை முதல்வர்' என்ன 'மாடு' பிடி வீரரா?... 'துரைமுருகன்' கேள்வியால் சட்டப்பேரவையில் 'சிரிப்பொலி'... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' கொடுத்த 'விளக்கம்...!'
- 'தேர்தலில் மக்கள் வைத்த ட்விஸ்ட்'... 'அந்த மக்களுக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்த 'திமுக பிரமுகர்'!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- "மு.க.ஸ்டாலினே நாளைய தமிழகத்தின் தலைவர்!!"... "சசிகலாவின் சகோதரர் அதிரடி"... "அரசியலில் பரபரப்பு!"
- ‘நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு’... ‘அட்வைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்’... ‘கண்டனம் தெரிவித்த அமைச்சர்!
- "பத்த வச்சிட்டியே பரட்டை..." அமைச்சர் ஜெயக்குமாரின் "இது எப்படி இருக்கு" கமெண்ட்...
- 'முரசொலி வைத்திருந்தால் என்ன பொருள் தெரியுமா'?... 'ரஜினிகாந்திற்கு முரசொலியின் பரபரப்பு பதிலடி!
- "நான் சொன்னது நடக்குதா? இல்லையா?..." அரசியல் 'நாஸ்ட்ரடாமஸ்' கமல்ஹாசனின் ஆருடம்...
- சட்டப்பேரவை கூட்டத் தொடர்... கவர்னர் உரையை கிழித்த ஜெ.அன்பழகன் சஸ்பெண்ட்... விபரங்கள் உள்ளே!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!